திருமணமாகி 2 வருடத்தில் விவாகரத்து! 30 வயதான சீரியல் நடிகை மேக்னாவின் தற்போதைய நிலை..
தொலைக்காட்சி சீரியல்கள் மூலம் பல பிரபலங்கள் ரசிகர்களை கவர்ந்து வருவார்கள். அப்படியான பிரபல தொலைக்காட்சி சீரியல் மூலம் தமிழ் சீரியல் பொன்மகள் வந்தாள் சீரியல் மூலம் பிரபலமான நடிகை மேக்னா வின்செண்ட். சமீபத்தில் கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தார்.
இதற்கு காரணம் இந்த நடிகர் தான் என்று மேக்னாவுடன் சேர்ந்துஜோடியாக நடித்த விக்கி என்கிறார்கள். திருமணமாகியும் ஒன்றாக நடித்ததால் தான் கணவருக்கு விவாகரத்து கொடுத்தார் என்றும் நடிகர் விக்கியும் தன் மனைவியை விவாகரத்து செய்தார் என்று கூறப்படுகிறது. ஆனால் சமீபத்தில் தன் விவாகரத்து பற்றி பேட்டியொன்றில் சாட்டமாக கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது பற்றி அவர் கூறியதாவது, என் விவாகரத்து என் விருப்பத்தோடு நடந்தது. அதற்கான காரணத்தை நான் ஏன் கூற வேண்டும். முடிந்த விஷயத்தை பற்றி பேசி ஒன்றும் ஆகப்போவதில்லை. இதுபற்றி இனிமேல் யாரும் கேட்கவேண்டாம் என்று கூறியிருந்தார். இதையடுத்து ஆள் அடையாளம் தெரியாமல் இருந்து சில சீரியல்களில் மட்டும் நடித்து வருகிறார் மேக்னா. தற்போதைய புகைப்படங்கள் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.