என்னுடைய உள்ளாடையை கூட விட்டு வைக்கல, அதையும் .. தனுஷ் பட நடிகை வேதனை
நடிகர்தனுஷ் நடிப்பில் வெளியான குட்டி திரைப்படத்தில் கண்ணு ரெண்டும் ரங்கராட்டினம் என்ற பாடலில் நடனமாடி தமிழ் சினிமா ரசிகர்கள்கவர்ந்தவர் தான் மேக்னா நாயுடு. இதனை அடுத்து இவர் படங்களில் ஐட்டம் பாடல்களுக்கு நடனமாடி இருக்கிறார்.
சமீபத்தில் மேக்னா நாயுடு தன்னுடைய முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். அதில் அவர், எங்களுக்கு கோவாவில் வீடு ஒன்று இருக்கிறது. என்னுடைய வீட்டை நாங்கள் ஒப்பந்தம் செய்த பராமரிப்பாளர் பராமரித்து கொண்டிருந்தார். எங்கள் வீட்டை ஒரு தம்பதியர்கள் வாடகைக்கு கொடுத்தோம். கடந்த சில மாதங்களாக அவர்கள் வாடகை செலுத்தாமல் இருந்தனர்.
இந்நிலையில், திடீரென இரவோடு இரவாக அந்த தம்பதியர்கள் காணாமல் போய்விட்டார்கள். என்னுடைய துணிமணிகள் மற்றும் உபகரணங்கள் எல்லாம் அந்த வீட்டில் நான் வைத்திருந்தேன். அங்கு இருந்த என்னுடைய அத்தனை பொருட்களையும் திருடிவிட்டு சென்றுள்ளனர். என்னுடைய உள்ளடையை கூட விட்டுவைக்கவில்லை என்று நடிகை மேக்னா நாயுடு கூறியுள்ளார்.