40 வயதில் ரத்த வாந்தி!! காதலை தொலைத்து!! மரணமடைந்த மெட்டி ஒலி விஜி.. இதுவும் ஒரு காரணமா?
சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கு எக்கச்சக்க ரசிகர்கள் கூட்டம் இருக்கிறார்கள். அப்படி 90ஸ் கிட்ஸ்களின் முக்கிய சீரியலாக இருந்து டிஆர்பியை தூக்க வைத்த சீரியல் மெட்டி ஒலி. இந்த சீரியலில் விஜி ரோலில் நடித்து அனைவரையும் ஈர்த்தவர் நடிகை உமா மகேஸ்வரி. கடந்த 2021ல் திடீரென உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்தது அதிர்ச்சியை கொடுத்தது. இதற்கு முக்கிய 3 காரணங்கள் கூறப்படுகிறது.
சில படங்களில் நடித்து வந்த உமா மகேஸ்வரி சினிமாவில் இல்லாத ஒருவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் சீரியலில் நடிக்க அவரது கணவர் ஒத்துக்கொள்ளவில்லை.
அக்காவை போல் நடிக்க ஆசைப்பட்டதாக கணவரிடம் கூறியதற்கு, சினிமாவில் இருப்பவரை திருமணம் செய்திருக்கனும் என்னை திருமணம் பண்ணியிருக்க கூடாது என்றும் இதனால் தினமும் பிரச்சனையாகி சண்டையாக மாறியும் வந்துள்ளது.
இதனால் மன உளைச்சலில், மஞ்சள் காமாலை ஏற்பட்ட உடல் மோசமாகியுள்ளது. மேலும் மெட்டி ஒலி சீரியலில் நடிக்கும் போது சீரியல் இயக்குனர் திருமுருகனை காதலித்தும் வந்திருக்கிறார் உமா மகேஸ்வரி.
அப்படி அவரை திருமணம் செய்திருக்கலாம். இல்லை என்றால் சினிமாவை சேர்ந்தவரை திருமணம் செய்திருக்கலாம். கடைசியில் காதலையும் தொலைத்து 40 வயதிலேயே உயிரையும் விட்டுவிட்டார்.
அவரின் மரணம் குறித்த உறுதியான காரணம் இன்னும் தெரியவில்லை. ஆனால் இறப்புக்கு முன் ரத்த வாந்தி எடுத்ததாகவும் கூறப்படுகிறது.