பேசிய விமர்சகர்கள் அனைவருக்கும் பதிலடி கொடுத்த மைக்கேல் வசூல், இத்தன ஆயிரம் கோடிகளா
Michael Jackson
By Tony
மைக்கேல்
பாப் உலகின் கிங் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் மைக்கேல் ஜாக்சன். இவர் 50+ வயதிலேயே இறந்தது ஒட்டு மொத்த இசை ரசிகர்களுக்கு கடும் வருத்தம் தான்.
ஏனெனில் உலகளவில் மைக்கேல் ஜாக்சன் புகழ் அப்படி பரவி இருந்தது, இவரின் த்ரில்லர் ஆல்பம் எல்லாம் பட்டி தொட்டியெங்கும் பரவி, மெகா ஹிட் அடித்தது.

இவரை சுற்று பல விதமான சர்ச்சைகளும் இருந்து தான் வருகின்றது, அந்த வகையில் மைக்கேல் ஜாக்சன் குறித்து தற்போது ஒரு படம் பையோகிராபியாக வெளிவந்துள்ளது.
வசூல்
இந்த படம் ப்ரீமியரில் பல விமர்சகர்களால் கழுவு ஊற்றப்பட்டது, அதிலும் 10 க்கு 2 மதிப்பெண், 3 மதிப்பெண் எல்லாம் கொடுத்தனர்.
ஆனால், அவர்கள் எல்லோரு விமர்சனங்களுக்கும் பதிலடி கொடுக்கும் வகையில் உலகம் முழுவதும் மைக்கேல் படம் ரூ 2000 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.