என்னம்மா நீ இப்டி பண்றியே மா', நடிகை கங்கானாவுக்கு மீண்டும் வலுக்கும் கண்டங்கள்!

actress kanganaranaut
By Yathrika Nov 12, 2021 08:27 AM GMT
Report

சமீபத்தில் பத்ம விருது வென்ற பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்தின் விருதை இந்திய அரசு திரும்ப பெற வேண்டும் என பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

ஹிந்தியில் பல வெற்றி படங்களை கொடுத்து தன் வியத்தகு நடிப்பால் பல தேசிய மற்றும் உயரிய விருதுகளை தன் வசம் வைத்திருக்கும் கங்கனா தமிழில் தாம்தூம் படத்தில் ஜெயம் ரவியுடன் சேர்ந்து நடித்திருந்தார்.

அதன் பின் சில மாதங்களுக்கு முன் வெளியான தலைவி படம் மூலம் தமிழில் மீண்டும் என்ட்ரி கொடுத்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்திருக்கிறார்.

இந்நிலையில் தான் சில தினங்களுக்கு முன்பு சுதந்திரம் குறித்து இவர் பேசியிருக்கும் கருத்து இணையத்திலும் அரசியல் தலைவர்கள் மத்தியிலும் பெரும் கணடனத்திற்கு வழி வகுத்துள்ளது.

2014-ல் பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்ற பிறகு தான் இந்தியாவிற்கு உண்மையான சுதந்திரம் கிடைத்துள்ளது. 1947-ல் கிடைத்தது வெறும் பிச்சை என்னும் கங்கானாவின் இந்த கருத்து தான் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.