உன் வேலை என்ன! மிர்ச்சி சிவாவை நேரலையில் அசிங்கப்படுத்திய இளையராஜா..
தமிழ் சினிமாவின் அகில உலக சூப்பர் ஸ்டார் என்ற பெயரை எடுத்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருபவர் நடிகை மிர்ச்சி சிவா. சரோஜா, தமிழ் படம், வா, கலகலப்பு, மசாலா படம், தமிழ் படம் 2, இடியட் உள்ளிட்ட காமெடி கலந்த ரொமாண்டிக் படங்களில் நடித்து நல்ல வரவேற்பு பெற்று வருகிறார்.
சினிமாவை தாண்டி ஆர்ஜே வாக பணியாற்றி பின் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். விருது விழாக்களை காமெடியாக எண்டர்டெண்ட்மெண்ட் செய்து ரசிக்கவும் வைத்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் சித்ரா லட்சுமணனின் யூடியூப் சேனலுக்கு பேட்டிக்கொடுத்துள்ளார் மிர்ச்சி சிவா.
பல விசயங்களை பகிர்ந்து கொண்ட சிவா, எஸ்பிபி சார் என் படத்தை தான் முதன் முதலில் தயாரித்தார். அவர் தயாரித்த முதல் படமான சென்னை 28 படத்திலும் எனக்காக பாடி இருக்கிறார் என்று கூறினார். மெலும், இளையராஜாவிடம் அசிங்கப்பட்ட சம்பவத்தையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.
ஒரு பேட்டியில், அவரிடம் ஆன்மீகம் ஆன்மீகம் என்று பேசுறீங்க, ஆன்மீகம் என்றால் என்ன என்று கேட்டேன். அதற்கு அவர் உன் வெலை என்ன என்று திருப்பி கேட்டார். என் வேலை என்ன, உனக்கு பதில் சொல்றது. இதிலிருந்து என்ன புரிது என்று கேட்டார்.
அதற்கும் அமைதியாக இருந்தேன். பின் அவர் சொன்னார், அவங்க அவங்க வேலைய அவங்க செய்தாலே போது ம் இந்த உலகம் சரியாக போகும் என்று கூறினார். இதன்பின் இனிமேல் இசையை பற்றி பேட்டி எடுக்கவில்லை அவரிடம் என்று காமெடியாக கூறியுள்ளார்.