இரவு முழுவதும் ரகசிய காதலனுடன் சண்டை!! ஸ்ரீதேவியின் சீக்ரெட் காதல் இந்த நடிகரா?
நடிகை ஸ்ரீதேவி
தென்னிந்திய சினிமா, பாலிவுட் சினிமா என்று டாப் நடிகையாக 90ஸ் காலக்கட்டத்தில் திகழ்ந்து வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. முன்னணி நடிகர்களுக்கு இணையாக சம்பளம் வாங்கிய நடிகை ஸ்ரீதேவி, தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து இரு பெண் பிள்ளைகளை பெற்றார்.
அதன்பின் ஒருசில படங்களில் நடித்த ஸ்ரீதேவி, 2018ல் துபாய் ஓட்டல் ஒன்றில் மர்மமான முறையில் மரணமடைந்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மிதுன் சக்ரவர்த்தி
இந்நிலையில் ஸ்ரீதேவியின் சினிமா வாழ்க்கையில் பல நடிகர்களுடன் இணைத்து கிசுகிசு எழுந்தது. அந்தவகையில் பாலிவுட் நடிகர் மிதுன் சக்ரவர்த்தி - ஸ்ரீதேவி காதல் கதை மர்மமானது.
இருவரும் காதலை உறுதி செய்யவில்லை என்றாலும் இருவரின் கெமிஸ்ட்ரி ரசிக்கும் படியாக இருக்கும். இவர்களின் உறவு குறித்து கரண் ரஸ்தான் அளித்த பேட்டியொன்றில், மிதுன், ஸ்ரீதேவி பல படங்களில் ஒன்றாக நடித்த போது காதலித்ததாக கூறப்பட்டது.
மிதுன் ஏற்கனவே யோகிதா பாலி என்பவரை திருமணம் செய்திருந்தார். அதுவும் இருவரும் ரகசிய திருமணம் செய்ததாக கூறப்பட்டது. ஸ்ரீதேவி இதனால் பாதிக்கப்பட்டதாக நடிகை சுஜாதா மேத்தா கூறினார்.
கேமரா முன் வேலை செய்வார், பின் அமைதியாக இருப்பார், திருமணம் பற்றி உறுதியாக தெரியவில்லை என்றும் கரண் ரஸ்தான் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய கரண், மிதுனின் அர்ப்பணிப்பை பாராட்டி பேசியுள்ளார். அவர் இரவில் நடன பயிற்சி செய்வார், ஸ்ரீதேவியுடன் சண்டைப்போட்டாலும் சரியான நேரத்திற்கு வேலைக்கு வருவார்.
அவர் உணர்ச்சிவசப்படக்கூடியவர். இருவரும் பிரிந்ததற்கு காரணம் மிதுனின் திருமணம் தான். யோகிதா பாலிக்கு இதில் கஷ்டம் ஏற்பட்டதால் அவர் தற்கொலைக்கு முயன்றார். அப்போது மிது யோகிதாவுடன் இருந்தார் என்று கரண் ரஸ்தான் தெரிவித்துள்ளார்.