சொத்து தகராறு.. பத்திரிக்கையாளர்களை விரட்டி தாக்கிய நடிகர் மோகன் பாபு

Actors
By Kathick Dec 11, 2024 03:30 AM GMT
Report

தெலுங்கு திரையுலகில் பிரபலமான மூத்த நடிகர்களில் ஒருவர் மோகன் பாபு. இவருக்கு லட்சுமி மஞ்சு, மஞ்சு மனோஜ் மற்றும் விஷ்ணு மஞ்சு என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

இவர்களும் சினிமா துறையில் பணியாற்றி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் மோகன் பாபுவிற்கு பல கோடி சொத்துக்கள் உள்ளதாக சொல்லப்படுகிறது.

சொத்து தகராறு.. பத்திரிக்கையாளர்களை விரட்டி தாக்கிய நடிகர் மோகன் பாபு | Mohan Babu Attacks Journalists Video Gone Viral

தற்போது மோகன் பாபு மற்றும் அவரது மகன் மஞ்சு மனோஜ் இடையே சொத்து தகராறு நடந்து வருகிறது. மகன், மருமகள் தனது வீட்டில் அனுமதியின்றி நுழைந்து, வீட்டை ஆக்ரமித்து விட்டதாக மோகன் பாபு காவல் துறையில் புகார் அளித்துள்ளார். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த நிலையில், நடிகர் மோகன் பாபு வீட்டிற்கு பாத்திரிக்கையாளர்கள் வந்துள்ளனர். அப்போது அவர்களை விரட்டி மைக்கை பிடிங்கி தாக்கி இருக்கிறார் மோகன் பாபு. சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..