இதெல்லாம் ஒரு பேச்சா..மோகன் ஜி-யை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்
Mohan G
By Tony
மோகன் ஜி தமிழ் சினிமாவில் சர்ச்சையான படங்களாக எடுத்து சினிமா பயணத்தை ஓட்டி வருபவர்ம் இவர் இயக்கத்தில் வெளிவந்த திரௌபதி பெரிய வெற்றியை பெற்றது.
ஆனால், அதே நேரத்தில் ருத்ர தாண்டவம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் இவர் இயக்கத்தில் அடுத்த வாரம் பகாசூரன் படம் வெளிவரவுள்ளது.
இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக ஒரு கல்லூரி விழாவுக்கு சென்றார். அங்கு அவர் பெண்கள் சமூக வலைத்தளங்களில் உங்கள் போட்டோக்களை போடாதீர்கள் என்று கூறியுள்ளார்.
அதை தவறான வழியில் பயன்படுத்துவார்கள் என சொல்ல நெட்டிசன்கள், முதலில் ஆண்களுக்கு எப்படி ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்று பாடம் எடுங்கள், பெண்களுக்கு கட்டுப்பாடு போடாதீர்கள் என விலாசி வருகின்றனர்.