போயஸ் கார்டனில் வாழ்ந்தவர்..இப்போ மாத்திரை வாங்கக்கூட காசு இல்லாத நிலை!! நடிகருக்கு ரஜினி செய்த செயல்...

Rajinikanth Actors Tamil Actors
By Jai Jul 31, 2026 12:30 PM GMT
Report

மோகன் சர்மா

தமிழ் சினிமாவில் பணியாற்றிய பல கலைஞர்கள் பெரிய வீடுகள், கார்கள், புகழ், ரசிகர்கள் என எல்லாமே வியப்பாக தோன்றும், ஆனால் அந்த வெளிச்சத்துக்கு பின் எத்தனையோ கலைஞர்களின் வாழ்க்கை அமைதியாக கலைந்து போயிருக்கிறது. அப்படிப்பட்ட வேதனையை அனுபவித்திருக்கிறார் நடிகரும் தயாரிப்பாளருமான மோகன் சர்மா.

போயஸ் கார்டனில் வாழ்ந்தவர்..இப்போ மாத்திரை வாங்கக்கூட காசு இல்லாத நிலை!! நடிகருக்கு ரஜினி செய்த செயல்... | Mohan Sharma No Money Even Rajini Did Help

கடந்த சில நாட்களாக உடல் நிலை குறித்து சோசியல் மீடியாக்களில் பரவி வந்த நிலையில், அவர் அளித்த பேட்டியொன்று பலரையும் உருக வைத்துள்ளது.

போயஸ் கார்டனில்

அவர் பேசுகையில், ஒருகாலத்தில் நான் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் நல்ல நிலையில் இருந்தபோது போயஸ் கார்டனில் ஜெயலலிதா அம்மா வீட்டுக்கு பக்கத்தில் தான் என் வீடு இருந்தது. ஆனால் இன்று மருந்து வாங்குவதற்குகூட என்னிடம் காசு இல்லை. அதனால் தான் வேறுவழியின்றில் கும்மிடிப்பூண்டி அருகே இருக்கும் இலவச முதியோர் இல்லத்தில் தங்கியிருக்கிறேன்.

போயஸ் கார்டனில் வாழ்ந்தவர்..இப்போ மாத்திரை வாங்கக்கூட காசு இல்லாத நிலை!! நடிகருக்கு ரஜினி செய்த செயல்... | Mohan Sharma No Money Even Rajini Did Help

ரஜினி

இங்கதான் எனக்கு சாப்பாடும், தங்க இடமும் கிடைக்கிறது. தன்னுடைய நிலையை அறிந்த ரஜினிகாந்த் ஃபோன் செய்து பேசினார். அப்போது உங்களுடைய அக்கவுண்ட் டீலைல்ஸ் அனுப்புங்க சர்மா என்று சொன்னார். நானும் அனுப்பினேன். உடனே எனக்கு ஒரு லட்சம் கொடுத்து உதவினார்.

போயஸ் கார்டனில் வாழ்ந்தவர்..இப்போ மாத்திரை வாங்கக்கூட காசு இல்லாத நிலை!! நடிகருக்கு ரஜினி செய்த செயல்... | Mohan Sharma No Money Even Rajini Did Help

ரஜினி பலருக்கு செய்த உதவிகள் வெளியே தெரியாது, அதுபோல் தான் அவர் எனக்கு செஞ்சதும் வெளியில் தெரியாது. நான் கஷ்டத்தில் இருந்தபோது எனக்கு உதவினார் என்று கூறியிருக்கிறார்.