த்ரேதா யுகத்தில் ஜாக்கெட்டா!! சாய் பல்லவியின் பேக்கிரவுண்ட் ஆர்ட்டிஸ் சூப்பர்!! ராமாயணா சர்ச்சை..
ராமாயணா
இயக்குநர் நிதிஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ், ரகுல் ப்ரீத் சிங், சன்னி தியோல் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் தான் ராமாயணா. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ள ராமாயணா படத்தின் டிரைலர் நேற்று ஜூலை 30 ஆம் தேதி இணையத்தில் வெளியானது.

அதை பார்த்த ரசிகர்கள் சீஜி சரியில்லை, யானை பறக்குமா, ரன்பீர் கபூருக்கு செட்டே ஆகவில்லை, யஷ் மட்டுமே படத்தில் மிரட்டப்போகிறார் என்றெல்லாம் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்.
அதே சமயம் ஏகப்பட்ட ட்ரோல்களும் பரவி வருகிறது. அதிலும் சாய் பல்லவின் ஜாக்கெட்டை வைத்தும் அவர் பக்கத்தில் இருப்பவரை வைத்தும் விமர்சனங்கள் எழுந்து வருகிறது. தனக்கு அருகே இருக்கும் நடிகை குள்ளமாகவும் கருப்பாகவும் டல் மேக்கப்புடன், சரியான லைட் வெளிச்சம் இல்லாமல் பார்த்துக் கொள்வதில் பல நடிகர்களும் நடிகைகளும் கெட்டிக்காரர்கள்.

ஆனால் அதையெல்லாம் விடுத்து தன்னையும் தன்னுடைய நடிப்பையும் மட்டுமே நம்பி சீதையாக சாய் பல்லவி நடித்துள்ள தைரியம் தான் இந்த போட்டோவில் தெரிகிறது என்று நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகிறார்கள்.
அதேபோல் த்ரேதா யுகத்தில், எப்படி ஜாக்கெட் எல்லாம் இருந்தது என்றும் கலாய்த்து வருகிறார்கள்.
Not everyone is Mukesh Chhabra or Aditya Dhar when it comes to casting.
— Swaksh Tripathi (@SwakshTripathi) July 30, 2026
Nitish bro, the actress in the background is stealing the entire frame. She completely overshadows Sai Pallavi in this shot. pic.twitter.com/W9WqZU4End