லட்சுமிக்கும் எனக்கும் ஏற்பட்ட உறவு..பிரிவுக்கு இதான் காரணம்!! மோகன் சர்மா ஓபன் டாக்..
மோகன் சர்மா - லட்சுமி
பிரபல நடிகர் மோகன் சர்மா, நடிப்பில் மட்டுமல்ல இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும், திரைக்கதை ஆசிரியராகவும் பணியாற்றியவர். தென்னிந்திய சினிமாவில் பல மொழிகளில் நடித்து வந்த மோகன் சர்மா, நடிகை லட்சுமியை காதலித்து திருமணம் செய்து பின் பிரிந்தார்.
நடிகை லட்சுமியை பிரிந்தது குறித்து சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார். அதில், நானும் லட்சுமியும் ஒருசில படங்களில் இணைந்து நடித்தபோது நெருக்கம் ஏற்பட்டு உறவு ஏற்பட்டது. பிரபலமான நடிகையாக இருந்த லட்சுமி திடீரென காதலிக்கிறேன் என்று சொன்னதை நான் எதிர்ப்பார்க்கவில்லை.
அவர் காதலை சொன்னதும் யாரையாவது திருமணம் செய்துக்கொள்ளத்தானே போகிறோம் என்று நானும் ஓகே சொல்லிவிட்டேன். என் குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ளவில்லை, என் அம்மாவிற்கு ஹார்ட் அட்டாக் வந்து மருத்துவமனையில் அனுமதிக்கும் அளவிற்கு சென்று பின் போராடி காப்பாற்றினோம்.
பிரிவுக்கு இதான் காரணம்
அப்படி போராடி திருமணம் செய்த வாழ்க்கை 5 ஆண்டுகள் கூட நிலைக்கவில்லை. அதே வீட்டில் தான் ருக்மணி அம்மா, லட்சுமியின் மகள் ஐஸ்வர்யா என அனைவரும் இருந்தோம். அவர்களுடன் என்னால் ஒத்துப்போகவில்லை, திடிரேன ஒருநாள் எனக்கு அந்த வீட்டில் இருக்கவே பிடிக்கவில்லை என்பதால் பெட்டியில் என் துணிகளை எடுத்துக்கொண்டு காரில் யாரிடமும் சொல்லாமல் கிளம்பி வாடகைக்கு எடுத்து வைத்திருந்த அலுவலகத்திற்கு சென்று தங்கினேன்.
இருவரும் காதலித்து தான் திருமணம் செய்தோம் என்றாலும் இருவரும் பிரச்சனையை பேசித்தீர்த்துக்கொள்ளவேண்டும், இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என்று தோன்றவில்லை. எந்த வித பேச்சு வார்த்தையும் நடக்கவே இல்லை. திருமணத்திற்கு முன் இருவரும் உறவில் இருந்த போதே நான் திருமணம் செய்துக்கொள்ளமாட்டேன் என்கிற பயம் லட்சுமிக்கு இருந்தது, திருமணத்திற்கு பின்பும் அந்த பயம் மாறவில்லை, அப்படியேத்தான் இருந்தது.
ஒரு நடிகர், ஒரு நடிகையை திருமணம் செய்துக்கொள்ளும் போது நிறைய விட்டுக்கொடுக்க வேண்டியது அவசியம். அப்படி சில விஷயங்களை விட்டுக்கொடுக்க எங்கள் இருவராலும் முடியவில்லை. இதனால் நாங்கள் இருவரும் பிரிந்துவிட்டோம். அவர் வழியில் அவர் சென்றார், என் வழியில் நான் சென்றுவிட்டார்.
எந்தவொரு நடிகராக இருந்தாலும், ஒரு நடிகையை திருமணம் செய்துக்கொள்கிறேன் என்றால் அதற்கு நான் சம்மதிக்கவே மாட்டேன், அப்படி திருமணம் செய்து கொள்கிறார்கள் என்றால் அவர்களுக்குள் மிகப்பெரிய அட்ஜஸ்ட்மெண்ட் இருக்க வேண்டும், புரிதல் இருக்க வேண்டும், அப்போதுதான் வாழ்க்கை சிறப்பாக இருக்கும், இல்லை என்றால் வீணாகிவிடும் என்று மோகன் சர்மா தெரிவித்துள்ளார்.