60 வயசான மனுஷன் இதையா செய்றது! ஜிம்மில் கஷ்டப்பட்டு பாக்ஸராக நினைக்கும் பிரபல நடிகர்..

மலையாள சினிமாவில் ஜாம்பவான் நடிகராக திகழ்ந்து 60 வயதானாலும் தனது கெத்தான உடல் அமைப்பால் இன்னும் ரசிகர்களை ஈர்த்து வருபவர் நடிகர் மோகன்லால்.

வெளிநாட்டு நடிகர்கள் 60 வயதிலும் யாரும் யோசித்து கூட பார்க்க முடியாத அளவுக்கு பல ஸ்டண்ட் காட்சிகளில் நடித்து அனைவரையும் அசர வைக்கின்றன. ஆனால் இந்தியாவில் அப்படி வயதைப் பார்க்காமல் கடின உழைப்பை காட்டி வருகிறார் மோகன்லால். பிரியதர்ஷன் இயக்கும் படத்தில் பாக்ஸிங் வீரராக நடிக்கவுள்ளார்.

அதற்காக கடின உடற்பயிற்சியிலும் பாக்ஸிங் வீரரை போன்ற நிலையை உருவாக்கியும் பயிற்சி செய்து வருகிறார். இதற்காக கஷ்டப்பட்டு உடல் எடையை குறைத்து வருகிறார். கடைசியாக மோகன்லால் நடிப்பில் வெளியான த்ரிஷ்யம் 2 படத்தில் கூட உடல் எடை கொஞ்சம் குறைந்திருப்பதை பார்க்க முடிந்தது.

மலையாள சினிமாவில் மோகன்லாலை வைத்து அதிக படங்கள் இயக்கிய இயக்குனராகவும் ப்ரியதர்ஷன் மலையாள சினிமாவில் இருந்து ஹிட் கொடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்