காதல் காட்சிகளில், விருப்பம் இல்லை.. மோனிஷா பிளெஸ்சி ஓபன் டாக்

Cooku with Comali Actress Coolie
By Bhavya Aug 20, 2025 02:30 PM GMT
Report

மோனிஷா பிளெஸ்சி

விஜய் டிவியின் பாப்புலர் நிகழ்ச்சிகளில் ஒன்றான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் மோனிஷா பிளெஸ்சி.

அதன் பின் சன் டிவியின் டாப் குக் டூப் குக் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர். படங்களில் நடிக்க தொடங்கினார். அந்த வகையில், சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

சமீபத்தில் வெளிவந்த ரஜினியின் கூலி படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்து கவனம் பெற்றார். அதை தொடர்ந்து, விஜய்யின் ஜனநாயகன், விஜய் ஆண்டனியின் லாயர் படங்களிலும் நடித்துள்ளார்.

காதல் காட்சிகளில், விருப்பம் இல்லை.. மோனிஷா பிளெஸ்சி ஓபன் டாக் | Monisha Open Talk About Actress Role

ஓபன் டாக் 

இந்நிலையில், பேட்டி ஒன்றில் அவர் பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில், " சினிமாவில் நுழைந்த காலத்திலேயே ரஜினி சார், விஜய் சார், சிவா என மூவருடன் நடித்துவிட்டது பெருமையாக இருக்கிறது. ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்று எனக்கு விருப்பம் இல்லை.

காதல் காட்சிகளில் நான் பொருந்துவேனா என்று தெரியவில்லை. கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாக நல்ல பெயர் எடுக்கவே விரும்புகிறேன். பஹத் பாசில், சாய் பல்லவி ஆகியோருடன் நடிக்க விரும்புகிறேன். வித்தியாசமான வேடங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.   

காதல் காட்சிகளில், விருப்பம் இல்லை.. மோனிஷா பிளெஸ்சி ஓபன் டாக் | Monisha Open Talk About Actress Role