55 வயதில் 30+ அயிரம் பாடல் பாடியவர்! எடுபிடி வேலை பார்க்கவைத்தாரா பிரபல இசையமைப்பாளர்?

இந்திய சினிமாவில் பல லிஜெண்ட் இசையமைப்பாளர்களும் பாடகர்களுக்கு இருந்து வருகிறார்கள். அதில் தமிழ் சினிமாவில் இசைஞானி என அழைக்கப்படுபவர் இளையராஜா. தனக்கென ஒரு மைல் கல்லை எட்டி இன்னும் இந்தியா முழுவதும் பேசப்படும் இசையமைப்பாளராக இருந்து வருகிறார். தனக்கு எடுபிடி வேலை பார்த்து வந்தவரை கை பிடித்து தூக்கி விட்ட சம்பவம் கோலிவுட் வட்டாரத்தை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

அதாவது இளையராஜாவிற்கு மனோ பார்த்த சின்ன சின்ன வேலை பிடித்து போக, மனோவிற்கு பாடுவதற்கான வாய்ப்பு கொடுத்து தமிழ் சினிமாவில் ஒரு அங்கீகாரம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. ஆந்திராவைச் சேர்ந்த பாடகர் மனோ பாடல்கள் பாடுவது மட்டுமல்லாமல், நடிப்பு, தயாரிப்பு என்று பல திறமைகளைக் கொண்டவர்.

இவர் கிட்டத்தட்ட 30 ஆயிரம் பாடல்களுக்கு மேல் தெலுங்கு, தமிழ், பெங்காலி, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் பாடியுள்ளார் மனோ. அப்படியிருக்கையில், ஆரம்பக்காலத்தில் இளையராஜாவிற்கு இவரை ரொம்ப பிடித்து போக வேலைக்காரன் என்ற படத்தில் ‘வேலை இல்லாதவன் டா, வேலை தெரிஞ்சவன் டா’ என்ற பாடலை பாடுவதற்கான வாய்ப்பு கொடுத்துள்ளார்.

தற்போது கூட மனோ எனது தெய்வம் இளையராஜா தான் என்று பல பேட்டிகளில், மேடைகளில் தெரிவித்திருந்தார். உண்மையான பெயர் நாகூர் பாபு அவர் ஒரு முஸ்லிம், இந்த பெயரை இளையராஜா தான் மனோ என்று மாற்றி வைத்துள்ளாராம். இப்படி சினிமாவில் தன்னை தூக்கி விட்ட இளையராஜாவை தற்போது வரை தெய்வமாக கும்பிட்டு வருகிறார் மனோ.

இது எந்த அளவிற்கு அனைவருக்கும் தெரியாமல் போனது என்று தெரியாமல் இருக்கும். இதுவும் ஒரு தொழில் தர்மாக கருதப்படுகிறாம்.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்