ஸ்ரீதேவி அம்மாவிடம் அதற்காக பேசிய கமல்ஹாசன்? பிளான் போட்டு தூக்கிய பாலு மகேந்திரா!

sridevi kamalhaasan kannadasan balumahendra sathyamovies
By Edward Apr 09, 2022 08:07 AM GMT
Report

80 காலக்கட்டத்தில் எம்ஜிஆர், சிவாஜிக்கு பின்பட்ட காலங்களின் தமிழ் சினிமாவில் மிக முக்கிய இயக்குனர்கள் நடிகர்கள், தயாரிப்பாளர்கள் ஆட்சி செய்த காலம் தான் அது. அந்த காலக்கட்டத்தில் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த படமாக இருந்த படம் மூன்றாம் பிறை.

படம் வெளியாகி 40 ஆண்டுகள் கடந்தும் இப்படம் அழியாப்புகழை கொடுத்தது. அமரகாவியம் என்று கூறப்படும் மூன்றாம் பிறை படம் 1982ல் டி.ஜி. தியாகராஜன் கவனித்து வந்த சத்யா முவிஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. மென்மையான படங்களுக்கு பேர் போனாவர் என்றால் அது பாலுமகேந்திரா தான்.

தன் படங்கள் என்றாலே அந்தி மாலை சாயும் நேரத்திலும், அதிகாலை சூரியன் உதிக்கும் சமயத்திலும் தான் பாலு மகேந்திரா படங்களில் இருக்கும். அப்படியொரு மென்மையை கொடுத்திருப்பார் மூன்றாம் பிறை படத்தில். அப்படத்தில் யாரை நடிக்க வைக்கலாம் என்று நினைத்திருந்த பாலு மகேந்திரா, நடிகர் கமல்ஹாசனை கதாநாயகனாக போட்டார்.

அதன் பின் கமலிடம் ஹீரோயின் யாரை நடிக்க வைக்கலாம் என்று கேட்க ஸ்ரீதேவியை பரிந்துரைத்தார் கமல். உடனே பாலு மகேந்திரா கமலை வைத்து ஸ்ரீதேவி அம்மாவிடம் பேசி பாருங்கள் என்று கேட்டுள்ளார்.

அந்த காலக்கட்டத்தில் நடிகைகளின் கால்ஷீட் அவர்களின் அம்மா தான் பார்த்து வருவார்களாம். அப்படி ஸ்ரீதேவி அம்மாவும் ஸ்ரீதேவியும் சம்மதித்தார்கள். படமும் அற்புதமாக வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது.

கண்ணதாசனின் கடைசி படமாகவும் கடைசி பாடலாக கண்ணே கலைமானே தான் இருந்தது. அப்பாடலை எழுதிக்கொண்டிருக்கும் போது உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தாராம் கண்ணதாசன்.

அப்பாடலை 10 நிமிடத்தில் எழுதி முடித்திருக்கிறார் கவிஞர் கண்ணதாசன். இப்படத்தினால் தியாகராஜன் கண்ணீர் மல்க பாலு மகேந்திராவை தூக்கி வைத்து கொண்டாடியுள்ளாராம். இந்த செய்தியை பிரபல பத்திரிக்கையாளர் சுரா அவர்கள் பகிர்ந்து கொண்டுள்ளார்.

GalleryGallery