ஆசை வார்த்தை கூறி அந்த தொழிலுக்கு தள்ளப்பட்ட பெண்கள்.. வெளியான திடுக்கிடும் தகவல்

Tamil Cinema
By Dhiviyarajan Feb 03, 2023 01:15 PM GMT
Report

தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி பல பெண்களை ஏமாற்றி பாலியல் தொழிலுக்கு அனுப்பி வைப்பதாக தகவல் ஒன்று வெளியானது.

இதை குறித்து போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. 

திடுக்கிடும் தகவல் 

தற்போது இந்த விசாரணை அடிப்படையில் சென்னை சேர்ந்த கார்த்திகேயன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளார்.

கடந்த 9 ஆண்டுகளில் டெல்லி, மும்பை கொல்கத்தா உள்ளிட்ட 9 இடங்களில் இருந்து சினிமா வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி 100க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி பாலியல் தொழில் இடத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாக தகவல் வெளியானது. தற்போது இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

கைது செய்யப்பட்ட கார்த்திகேயன் மீது ஏற்கனவே பல வழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது.