கஞ்சாவுக்கு அடிமையான 15 வயது மகன்! தாய் செய்த விபரீத வைத்தியம்

Drugs Mother Teen Punishment
By Parthiban.A Apr 04, 2022 11:30 PM GMT
Report

போதைப்பொருளுக்கு அடிமையாவது தற்போதைய இளம் தலைமுறையினர் மத்தியிலும் அதிகம் நடந்து வருகிறது. அப்படி போதைக்கு அடிமைஆனவர்கள் ஒரு கட்டத்திற்கு பிறகு குற்றச்செயல்களில் ஈடுபடுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது.

ஆந்திராவில் 15 வயதான தனது மகன் கஞ்சாவுக்கு அடிமையாகி எல்லா நேரத்திலும் போதையில் கிடப்பதை பார்த்த தாய் போலீசில் புகார் அளித்து இருக்கிறார். அவர்களும் அந்த பையனுக்கு அறிவுரை கூறி இருக்கின்றனர்.

ஆனால் அந்த பையன் கேட்பதாக இல்லை. அதனால் தாய் ஒருகட்டத்தில் ஒரு அதிர்ச்சி வைத்தியத்தை கையில் எடுத்து இருக்கிறார்.

கஞ்சா பயன்படுத்த மாட்டேன் என வாக்குறுதி கொடுக்கும்படி அந்த பையனை கான்க்ரீட் தூணில் கட்டிவைத்து அவனது கண்ணில் மிளகாய் போடி தூவி இருக்கிறார். வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

வீடியோ பார்க்க இங்கே கிளிக் பண்ணுங்க