காதலனால் அம்மா சுட்டுகொலை!! இன்று பாலியல் தொழிலில் கைதான நடிகையின் மறுப்பக்கம்..
அனுஷ்கா மோனி மோகன்(மூன்) தாஸ்
மும்பை தானேயில் உள்ள காஷிமிரா பகுதியில் நடிகைகளை வைத்து விபச்சாரம் நடந்து வருவதாக போலிசாருக்கு தகவல் வந்ததை அடுத்து, இதுகுறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.
அப்போது 41 வயதான நடிகை அனுஷ்கா மோனி மோகன்(மூன்) தாஸ் என்பவர் தான் நடிகைகளை வைத்து விபச்சார தொழில் நடத்தி வந்துள்ளதை கண்டுப்பிடித்துள்ளனர். மாடல் நடிகையும் இந்தி, பெங்காலி மொழிப்படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை அனுஷ்கா மோனி மோகன் தாஸ்.
விபச்சார தொழில்
சில நாட்களுக்கு முன் நடிகைகளை வைத்து விபச்சார தொழில் செய்து வருவதை உறுதிப்படுத்தி அனுஷ்காவை கைது செய்து விசாரித்தனர். அதில் 2 நடிகைகளை மீட்டு காப்பகத்தில் அனுமதித்தனர்.
தற்போது மும்பையில் பிரபலமாகியுள்ள அனுஷ்கா மோனி மோகன் தாஸ் உட்பட 20 பேர் நடிகைகள் மற்றும் பெண்களை பாலியல் தொழிலில் தள்ளிய குற்றச்சாட்டில் கைது செயப்பட்டுள்ளனர். இந்நிலையில் மோனிகா பற்றிய சில தகவல்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
காதலனால் அம்மா சுட்டுகொலை
அதன்படி 23 வயதாக இருக்கும்போது தனது கல்லூரி காலத்தில் நடிகை அனுஷ்கா மோகன் தாஸ், தன்னைவிட ஒரு வயது இளம் மாணவரான அவினாஷ் பட்நாயக் என்பவை காதலித்துள்ளாராம். 2007ல் புத்தாண்டு நிகழ்வில் இருவரும் சந்தித்து காதல் வயப்பட்டுள்ளனர். ஆனால் 3 மாதங்களில் அவினாஷின் காதலை முறித்துள்ளார் மோகன் தாஸ்.
இதனால் கோபமடைந்த அவினாஷ், மோகன் தாஸை பழிவாங்க நினைத்து துப்பாக்கியை எடுத்துக்கொண்டு நேராக அவரின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு மோகன் தாஸ் இல்லை என்பதால், அங்கிருந்த அவரின் தாய் மற்றும் மாமாவை அவினாஷ் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்ததுடன் தானும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துள்ளார்.
இந்த சம்பவத்தில் மோகன் தாஸ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழ அப்போதே பரபரப்பாக வழக்கு பேசப்பட்டு வந்தது. தற்போது நடிகைகளை வைத்து பாலியல் தொழில் செய்ததாக சிக்கியுள்ளார் அனுஷ்கா மோனி மோகன் தாஸ்.