பிரிவதாக அறிவித்துவிட்டு மீண்டும் இணைந்த பிரபல ஜோடி!! என்னதான் நடந்தது?

Indian Actress Divorce Actress
By Jai May 20, 2026 01:45 PM GMT
Report

சூரஜ், மெளனி

தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை மெளனி ராய். கடந்த 2022 ஜனவரி 27 ஆம் தேதி தொழிலதிபர் சூரஜ் நம்பியார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பாரம்பரிய மலையாளி, பெங்காலி முறைப்படி இவர்களின் திருமணம் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது.

பிரிவதாக அறிவித்துவிட்டு மீண்டும் இணைந்த பிரபல ஜோடி!! என்னதான் நடந்தது? | Mouni Roy Announced Separation Again Follow Exhusb

இதனையடுத்து சமீபகாலமாக இவர்களுக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இருவருக்கும் விரைவில் விவாகரத்து என்ற தகவலும் இணையத்தில் கசியத் தொடங்க இதற்கு மெளனி ராய், வேறொரு நடிகையுடன் நெருக்கமாக இருப்பது தான் காரணம் என்றும் கூறப்பட்டு வந்தது.

இதனையடுத்து மெளனி ராய் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தாங்கள் இருவரும் பிரிந்து செல்வதாகவும் தங்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து ஊடகங்கள் மற்றும் சோசியல் மீடியாக்களில் வெளியாகும் தேவையற்ற வதந்திகளை தவிர்க்குமாறும், தனிமனித சுதந்திரத்தையும் கண்ணியத்தையும் வழங்குமாறு வேண்டுகிறோம் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை அறிக்கை மூலம் தெரிவித்தார்.

பிரிவதாக அறிவித்துவிட்டு மீண்டும் இணைந்த பிரபல ஜோடி!! என்னதான் நடந்தது? | Mouni Roy Announced Separation Again Follow Exhusb

இந்த அறிக்கை வெளியிடுவதற்கு முன், இருவரும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒருவரை ஒருவர் அன்ஃபாலோ செய்ததை நெட்டிசன்கள் கவனித்து விவாகரத்து வதந்திகளை பரப்பத் தொடங்கினர். இந்நிலையில் தங்களின் பிரிவை அறிவித்த சில நாட்களிலேயே தற்போது மீண்டும் இன்ஸ்டாகிராமில் சூரஜ், மெளனி ராயும் ஒருவரையொருவர் பின் தொடர ஆரம்பித்துள்ளனர். இந்த திடீர் மாற்றம் ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.