4 ஆண்டு திருமண வாழ்க்கை!! கணவரை விவாகரத்து செய்யும் நடிகை மெளனி ராய்..
மெளனி ராய்
சின்னத்திரையில் மாபெரும் வெற்றிகண்ட சீரியல் நாகினி. இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து இந்திய அளவில் பிரபலமானவர் நடிகை மௌனி ராய். இவர் கடந்த 2022ல் அவர் சூரஜ் நம்பியார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

நடிகை மௌனி ராய் தனது கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வருவதாக தகவல் பரவி வருகிறது. இன்ஸ்டாகிராமில் மௌனி ராய் தனது கணவரை அன்ஃபாலோ செய்துவிட்டார். அதனால் அவர்கள் இருவரும் விவாகரத்து செய்ய இருப்பதாக இணையத்தில் தகவல் பரவி வருகிறது.
மேலும் மௌனி ராயின் நெருங்கிய தோழியான நடிகை திஷா பாட்னியும் சூரஜ் நம்பியாரை அன்ஃபாலோ செய்ததும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சமீபத்தில் தன்னை பற்றி வெளியாகிய வதந்திகள் குறித்து கேள்விப்பட்ட, நடிகை மௌனி ராய் தனது இன்ஸ்டாகிராமில் "தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன், எங்களுக்கு தயவு செய்து பிரைவசி கொடுங்கள் என்று கூறியிருந்தார்.

விவாகரத்து
இந்நிலையில், நடிகை மெளனி ராய், தங்களின் தனிப்பட்ட வாழ்க்கையின் மீது செலுத்தப்படும் தேவையற்ற, அத்துமீறிய கவனம், தனக்கு ஏமாற்றத்தை அளித்ததாகவும் தாங்கள் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம்.
இந்த விஷயங்களை தனிப்பட்ட முறையில் சுமூகமாக கையாள்வதற்கு தேவையான நேரத்தை எடுத்துக்கொள்வதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்நேரத்தில் எங்களின் வாழ்க்கைக்கு மதிப்பளித்து, தங்களை பற்றியோ அல்லது வேறு யாரைப்பற்றியோ தவறான செய்திகளை பரப்புவதை நிறுத்துமாறும் கேட்டுக்கொள்கிறோம் என்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.