இரண்டு முறை செத்து பிழைத்த நடிகை ஜோதிகா!! பிளாப்புக்கு பயந்து போன இயக்குனர்..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்களில் கிளைமேக்ஸ் காட்சிகளில் ரசிகர்களுக்கு விருப்பம் இல்லாத அளவிற்கு எடுத்து சில சிக்கல்களையும் சந்திக்க வாய்ப்பிருக்கும். அப்படி முன்னணி நடிகர்களின் ரசிகர்களை திருப்திப்படுத்தாமல் போகும் கிளைமேக்ஸ் காட்சிகளை இயக்குனர்கள் வைத்து அதன்பின் அதற்கு ஏற்றார் போல மாற்றியமைத்து விடுவார்கள். அப்படி கமல், சூர்யா, அஜித், ரஜினி போன்ற நடிகர்களின் படங்களில் கிளைமேக்ஸ் காட்சிகளை மாற்றப்பட்ட படங்கள் என்னவென்று பார்ப்போம்.
நல்லவனுக்கு நல்லவன்
நடிகர் ரஜினிகாந்த், ராதிகா நடிப்பில் எஸ்.பி முத்துராமன் இயக்கத்தில் வெளியான படம் நல்லவனுக்கு நல்லவன். இப்ப்டத்தில் ரஜினி இறந்துவிடுவது போன்ற கிளைமேக்ஸ் காட்சிகள் அமைத்துவிட்டு, அதன்பின் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதால் கிளைமேக்ஸ் காட்சியை மாற்றியிருக்கிறார் இயக்குனர்.

காக்க காக்க மற்றும் வேட்டையாடு விளையாடு
இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவான படங்கள் காக்க காக்க மற்றும் வேட்டையாடு விளையாடு. இப்படத்தில் நடிகை ஜோதிகா கமல், சூர்யா இருவரின் படங்களில் ஜோடியாக நடித்திருப்பார். இவ்விரு நாயகன்களின் படங்களிலும் ஜோதிகா இறப்பது போன்ற கிளைமேக்ஸ் காட்சிகள் அமைக்கப்பட்டு பின் உயிருடன் ஜோதிகா இருப்பது போன்று மாற்றியமைத்திருப்பார் கெளதம் வாசுதேவ் மேனன். இப்படி இரு படங்களிலும் ஜோதிகாவை சாகடித்து பிழைக்க வைத்திருப்பார் கெளதம் மேனன்.

முகவரி - கிரீடம்
நடிகர் அஜித் நடிப்பில் வெளியான முகவரி படத்தில் ஜோதிகாவை விட்டுவிட்டு அஜித் தன் குடும்பத்திற்காக வேறொருவரை திருமணம் செய்துகொள்வது போல் காட்சியமைக்கப்பட்டு அதன்பின் அஜித் ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று ரிலீசுக்கு பின் கிளைமேக்ஸ் காட்சியை மாற்றியிருந்தனர். அதேபோல் அஜித்தின் கிரீடம் படத்தில் போலீஸ் ஆகமுடியாமல் போவது போல் அமைத்து அதன்பின் ஒரு வாரம் கழித்து கிளைமேக்ஸ் காட்சியை மாற்றினார்கள்.