புகையும் காதல்!! தனுஷின் சகோதரிகளை ஃபாலோ செய்து ஷாக் கொடுத்த மிருணாள் தாகூர்..

Dhanush Gossip Today Bollywood Indian Actress Mrunal Thakur
By Edward Aug 08, 2025 12:30 PM GMT
Report

தனுஷ் - மிருனாள் தாகூர்

நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். விவாகரத்துக்கு பின் இருவரும் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார்கள். தனுஷ் தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என இரு மொழிகளிலும் தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறார்.

புகையும் காதல்!! தனுஷின் சகோதரிகளை ஃபாலோ செய்து ஷாக் கொடுத்த மிருணாள் தாகூர்.. | Mrunal Thakur Follows Dhanush Sisters On Instagram

இந்நிலையில், நடிகர் தனுஷ் பிரபல நடிகை மிருனாள் தாகூரை காதலித்து வருவதாக பாலிவுட் ஊடகங்களில் செய்திகள் உலா வருகின்றனர். நடிகர் தனுஷின் Tere isqh mein படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று, அதற்காக பார்ட்டி வைத்தனர்.

அதில் மிருனாள் கலந்துகொண்டனர். அதன்பின், சமீபத்தில் மிருனாள் தாகூர் படத்தின் பிரிமியர் விழாவில் தனுஷ் வந்திருந்தார். இதன்பின்தான் இவர்கள் இருவரும் டேட்டிங் செய்து வருகிறார்கள் என்கிற தகவல் பாலிவுட் வட்டாரங்களில் பரவ துவங்கியது.

புகையும் காதல்

இதுகுறித்து இருவரும் விளக்கம் அளிக்காமல் இருந்து வரும் நிலையில், மீண்டும் ஒரு தகவல் புகைய ஆரம்பித்துள்ளது.

புகையும் காதல்!! தனுஷின் சகோதரிகளை ஃபாலோ செய்து ஷாக் கொடுத்த மிருணாள் தாகூர்.. | Mrunal Thakur Follows Dhanush Sisters On Instagram

அதாவது தனுஷின் சகோதரிகளான கார்த்திகா மற்றும் விமலகீதா இருவரையும் நடிகை மிருணாள் தாகூர், இன்ஸ்டாகிராமில் ஃபாலோ செய்துள்ளார் என்பதை இணையவாசிகள் கண்டுப்பிடித்துள்ளனர். அதுமட்டுமின்றி, அவர்கள் இருவரும் மிருணாள் தாகூரை இன்ஸ்டாகிராமில் ஃபாலோ செய்கிறார்கள்.