தனுஷ் படத்தின் பார்ட்டி.. கலந்துகொண்ட நடிகை மிருணாள் தாகூர்! புகைப்படம் இதோ

Dhanush Mrunal Thakur
By Kathick Jul 04, 2025 04:30 AM GMT
Report

மிருணாள் தாகூர்

வளர்ந்து வரும் சென்சேஷனல் நடிகைகளில் ஒருவர் மிருணாள் தாகூர். சீதா ராமம் படத்திற்கு பின் இவருடைய மார்க்கெட் வேற லெவலில் சென்று விட்டது. தென்னிந்திய சினிமா மட்டுமின்றி பாலிவுட் சினிமாவிலும் கலக்கிக்கொண்டு இருக்கிறார்.

Dacoit: A Love Story, Hai Jawani Toh Ishq Hona Hai, Tum Ho Toh, Pooja Meri Jaan என பல ஹிந்தி திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷ் படத்தின் பார்ட்டி.. கலந்துகொண்ட நடிகை மிருணாள் தாகூர்! புகைப்படம் இதோ | Mrunal Thakur In Dhanush Movie Party

தனுஷின் Tere Ishk Mein

இயக்குநர் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் மற்றும் க்ரித்தி சனோன் இணைந்து நடித்து வரும் திரைப்படம் Tere Ishk Mein. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் நிறைவு பெற்றது. இதற்கான படக்குழுவினர் பார்ட்டி வைத்து கொண்டாடினார்கள்.

இந்த பார்ட்டியில் நடிகை மிருணாள் தாகூர் கலந்துகொண்டுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது.

தனுஷ் மற்றும் மிருணாள் தாகூர் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாக, ரசிகர்கள் பலரும் இவர்கள் இருவரும் விரைவில் இணைந்து நடிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படங்கள்..

GalleryGalleryGalleryGallery