பிப்ரவரி 14ஆம் தேதி தனுஷ் - மிருணாள் தாகூர் திருமணம்..? நடிகையின் தரப்பில் இருந்து வெளிவந்த தகவல்

Dhanush Mrunal Thakur
By Kathick Jan 19, 2026 06:30 AM GMT
Report

நடிகர் தனுஷ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தனது மனைவியுடன் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்ததை நாம் அறிவோம். இது அவருடைய ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.

பிப்ரவரி 14ஆம் தேதி தனுஷ் - மிருணாள் தாகூர் திருமணம்..? நடிகையின் தரப்பில் இருந்து வெளிவந்த தகவல் | Mrunal Thakur Team Denied Marriage Rumours

இதன்பின் அவருடைய மறுமணம் குறித்து பல வதந்திகள் பரவி வந்தன. சமீபத்தில், நடிகை மிருணாள் தாகூருடன் தனுஷுக்கு திருமணம் நடக்கப்போவதாக தகவல்கள் பாலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டன.

வருகிற பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி இவர்களுடைய திருமணம் என கூறப்பட்டது. இதனை நிராகரித்து இதுவரை தனுஷ் தரப்பில் இருந்தோ அல்லது மிருணாள் தாகூர் தரப்பில் இருந்தோ பேசவில்லை.

பிப்ரவரி 14ஆம் தேதி தனுஷ் - மிருணாள் தாகூர் திருமணம்..? நடிகையின் தரப்பில் இருந்து வெளிவந்த தகவல் | Mrunal Thakur Team Denied Marriage Rumours

இந்த நிலையில், தனுஷுக்கும் மிருணாள் தாகூருக்கும் திருமணம் என பரவி வந்த தகவலை நடிகை மிருணாள் தாகூர் தரப்பில் இருந்து நிராகரித்துள்ளனர். அது எதுவும் உண்மையான தகவல் இல்லை என தெரிவித்துள்ளனர். இதன்மூலம் தனுஷ் - மிருணாள் தாகூர் திருமணம் குறித்து வெளிவந்த தகவல்கள் அனைத்துமே வதந்தி என தெரியவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.