ஒரு வருஷத்துக்கு இத்தனை லட்சமா!! தல தோனி மகளின் ஸ்கூல் ஃபீஸ் எவ்வளவு தெரியுமா?
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேட்பனும் சிஎஸ்கே அணியின் கேப்டனாகவும் திகழ்ந்து வரும் எம் எஸ் தோனி அடுத்த ஆண்டு 2025 ஐபிஎல் போட்டியில் அணியில் இடம்பெறுவாரா? அவரை அணி தக்கவைத்துக்கொள்ளுமா? பிசிசிஐ என்ன முடிவு எடுக்கப்போகிறது என்பதை பொறுத்தான் தோனியின் உடம் உறுதியாகும்.
தோனியின் மகள் ஜீவா
இதையெல்லாம் யோசிக்காமல் தோனி தன் குடும்பத்துடன் நேரத்தினை செலவிட்டு வருகிறார். எம் எஸ் தோனியின் மகள் ஜீவாவிற்கு தற்போது 9 வயதாகிறது. ஜிவா தோனி தற்போது சொந்த ஊரான ராஞ்சியில் இருக்கும் புகழ்பெற்ற டவுரியன் வேர்ஸ்ட் பள்ளியில்தான் படித்து வருகிறார்.
அமித் பஜ்லா என்பவரால் 2008ல் இந்த பள்ளி நிறுவப்பட்டு அப்பகுதியின் புகழ்பெற்ற போர்டிங் மற்றும் டே ஸ்கூல்களில் ஒன்றாக மாறியிருக்கிறது. இந்த பள்ளி 65 ஏக்கர் பரப்பளவில் பரந்துவிரிந்த வளாகத்தில் அமைந்திருக்கிறது.
இந்த பள்ளியில் ஜிவா தோனியின் சேர்க்கையால் ஒரு நட்சத்திர அந்தஸ்த்தை பெற்றிருக்கிறது. இப்பள்ளியில் பிள்ளைகளை சேர்க்க பெரிய கோடீஸ்வரர்கள் முன் வரிசையில் போட்டிப்போட்டு காத்திருக்கிறார்கள்.
ஆண்டுக் கட்டணம்
இங்கே படிக்கவைக்க ஆண்டுக்கு பல லட்சங்களை செலவிட வேண்டியிருக்கும். அப்படி இங்கே எல்கேஜி முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான ஆண்டுக் கட்டணம் தோராயமாக ரூ. 4.40 லட்சமாம். அதேபோல் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான கட்டணம் ஆண்டுக்கு 4.80 லட்சமாம்.
இந்த கட்டணத்தில் சீருடைகள், பாடப்புத்தகங்கள், பிறதேவையான பொருட்கள் ஆகிய எல்லாம் அடங்குமாம். இந்த பள்ளியில் சாதாரண மக்கள் காலெடி எடுத்து வைப்பது கடினம் என்பது குறிப்பிடத்தக்கது.