ரூ.9.10 லட்சம் கோடி சொத்து!! முகேஷ் அம்பானியின் ஒரு மாத செலவு எவ்வளவு தெரியுமா..
முகேஷ் அம்பானி
பிரம்மாண்டத்திற்கு பேர் போன கோடிஸ்வரர்களிலேயே உலகம் வியந்து பார்க்க கூடியவர் தான் முகேஷ் அம்பானி. ரூ. 9.10 லட்சம் கோடிக்கு மேல் சொத்து வைத்திருக்கும் அம்பானி, தன்னுடைய பிள்ளைகளின் திருமணத்தை உலகமே அண்ணார்ந்து பார்க்கும் அளவிற்கு நடத்தி முடிப்பார்.
அம்பானியின் மகன் அனந்த் அம்பானி - ராதிகா திருமணத்திற்கு பின், அவர்கள் பற்றிய சிறு செய்திகள் கூட வைரலாகி வருகிறது. இதனை தொடர்ந்து முகேஷ் அம்பானியின் 15 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட 27 மாடிகள் குறித்த தகவல்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
மாதம் எவ்வளவு செலவு
இந்நிலையில் முகேஷ் அம்பானி மற்றும் அவரை சுற்றி மாதம் எவ்வளவு செலவு ஆகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஆண்டிலியா வீட்டில் பணிபுரியும் சில ஊரியர்களின் சம்பளம் மட்டுமே மொத்தமாக மாதத்திற்கு 2 லட்சத்திற்கு மேல் இருக்கும். சுமார் 600க்கும் மேற்பட்டோர் பணிபுரிவதால் மாத சம்பளம் அவர்களுக்கு மட்டுமே கிட்டத்தட்ட 12 கோடி ரூபாய்க்கு மேல் இருக்குமாம். மேலும் வீட்டில் பராமரிப்பிற்கு தனியாக15 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது.
முகேஷ் அம்பானி குடும்பத்தினர் தினமும் போடும் ஆடையின் செலவு மட்டுமே மாதத்திற்கு 5 கோடிக்கும் மேல் செலவாகிறதாம். அதிலும் முகேஷ் அம்பானி பயணிக்கும் தனி விமானத்திற்கான செலவு மட்டுமே மாதத்திற்கு ரூ. 10 கோடி செலவாகிறது.
அம்பானியின் பாதுகாப்பிற்காக ஒரு மாதம் ரூ. 3 கோடிக்கும் மேல் செலவாம். ஒரு ஹோட்டலில் அம்பானி சென்று சாப்பிட்டு வந்தாலே குறைந்தது 10 லட்சம் முதல் 20 லட்சம் வரை செலவாகுமாம். முக்கிய விருந்தினர்கள் வந்து செல்வதால் அதற்காக ஆகும் செலவு மட்டுமே பல கோடி இருக்குமாம்.
அம்பானி மற்றும் அவர்கள் குடும்பத்தினர்களால் செய்யப்படும் செலவுகள் மட்டுமே 50 கோடி முதல் 60 கோடி வரை ஒரு மாதத்திற்கு செலவு செய்யப்படும் என்ற கூறப்படுகிறது. மேலும் அவர்களின் தனிப்பட்ட செலவுகள், வணிக செலவுகள், போய் வரும் பயண செலவுகள் சேர்த்து தினமும் ஒன்றை கோடி முதல் இரண்டரை கோடி வரை ஆகும் என்று கூறப்படுகிறது.