முகேஷ் அம்பானியின் 15 ஆயிரம் கோடி மதிப்புள்ள ஆண்டிலியா வீடு!! இத்தனை ஆடம்பர வசதிகளா?
முகேஷ் அம்பானி
பிரம்மாண்டத்திற்கு பேர் போன கோடிஸ்வரர்களிலேயே உலகம் வியந்து பார்க்க கூடியவர் தான் முகேஷ் அம்பானி. ரூ. 9280 லட்சம் கோடிக்கு மேல் சொத்து வைத்திருக்கும் அம்பானி, தன்னுடைய பிள்ளைகளின் திருமணத்தை உலகமே அண்ணார்ந்து பார்க்கும் அளவிற்கு நடத்தி முடிப்பார்.
அம்பானியின் மகன் அனந்த் அம்பானி - ராதிகா திருமணத்திற்கு பின், அவர்கள் பற்றிய சிறு செய்திகள் கூட வைரலாகி வருகிறது. இதனை தொடர்ந்து முகேஷ் அம்பானியின் 27 மாடிகள் கொண்ட ஆண்டிலியா வீட்டின் மாத கரண்ட் பில் 70 லட்சம் ரூபாய் என்ற தகவலும் பரவியது.
உலகத்தரம் வாய்ந்த பல வசதிகள் கொண்ட இந்த மாளிகையில் தனி உலகம் என்று சொல்லலாம். அங்கு ஒரு பிரம்மாண்ட கோயில் ஒன்றுள்ளது. முகேஷ் அம்பானியின் குடும்பம் ஆன்மீகத்தில் ஈடுபடுபவர்கள் என்பதால் அழகான கோயில் அண்டிலியாவில் அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு தெய்வசிலைகள், அழகான சிற்பங்கள் காணக்கிடைக்கினறன.
ஹெலிபேடுகள்
இந்நிலையில், ஆண்டிலியா வீட்டின் உச்சியில் 3 ஹெலிபேடுகள் உள்ளதாம். மும்பையின் வானலை மற்றும் அரபிக் கடலின் அற்புதமான காட்சியை வழங்குகின்றன. மோசமான வானிலையில் இருந்து தப்பிக்க பனி அறையும் இருக்கிறதாம்.
மெலும் ஆண்டிலியா வீட்டில் சுமார் 168 கார்களை நிறுத்தி வைக்கும் அளவிற்கு பார்க்கிங் வசதி உள்ளது. அம்பானியின் குடும்பத்திற்காக சொகுசு வாகனங்கள் எப்போது சரியாக இருக்க, ஏழாம் மாடியில் ஒரு கார் சர்வீசிங் நிலையம் இருக்கிறதாம். இதுபோல பல ஆடம்பர வசதிகள் கொண்டிருக்கிறது அம்பானியின் ஆண்டிலியா வீடு.