இப்போதான் புரியுது! பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை விலகினாரா?
mullai
serial
television
pandianstores
By Edward
பிரபல தொலைக்காட்சி சீரியல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்தவரிசையில் அண்ணன் தம்பி பாசத்தை மையப்படுத்தி ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ்.
சீரியலில் முல்லை கதாபாத்திரம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. ஏற்கனவே முல்லையாக விஜே சித்ரா நடித்து வந்தார்.
அவரின் மரணத்திற்கு பிறகு காவ்யா அறிவுமணி நடித்து வருகிறார். இந்நிலையில் அவரும் இந்த சீரியலில் இருந்து விலகவுள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது.
அவருக்கு பதில் அபிநயா என்பவர் நடிக்க இருப்பதாகவும் புகைப்படங்கள் வைரலானது.
ஆனால் காவ்யா முல்லை கதாபாத்திரத்தில் இருந்து விலகப்போவதில்லை என்று கூறியுள்ளார். அவரின் தோழியாகத்தான் அபிநயா நடிக்கவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.