ராஜா ராணி சீரியலை தூக்கி எறிந்த ஆலியா! கடைசில முல்லையாக மாறிட்டாங்களாமே..
பிரபல தொலைக்காட்சி சீரியல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அதில் ஒன்று தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேல் ஒளிப்பரப்பாகி வரும் இந்த சீரியலில் முல்லை கதாபாத்திரம் ரசிகர்களை மிகவும் கவர்ந்து வருகிறது.
அப்படி முல்லையாக ஆரம்பத்தில் விஜே சித்ரா நடித்து வந்தார். முல்லை ரோல் அவருக்கு அடுத்தடுத்த இடத்தினை பெற்று தந்தது. எதிர்பாராத விதமாக விஜே சித்ரா 2020 டிசம்பரில் தற்கொலை செய்து கொண்டதால் அவருக்கு பதில் சீரியல் நடிகை காவிடா நடிக்க ஆரம்பித்தார்.
ஆரம்பத்தில் பிடிக்காமல் போக பின் அவரை ஏற்றுக்கொண்டனர் ரசிகர்கள். தற்போது கதைக்களம் நல்லபடியான சென்று கொண்டிருக்கும் நிலையில் காவியா சீரியலில் இருந்து விலகவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதற்கு காரணம் படவாய்ப்புகள் அதிகரித்து வருவதால் அதில் கவனம் செலுத்தப்போவதாக கூறியுள்ளார் காவியா.
தற்போது முல்லையாக ராஜா ராணி புகழ் ஆலியா மானசா நடிக்கவுள்ளதாக புதிய தகவல் கிடைத்துள்ளது. ஏற்கனவே கர்ப்பமாகி இரண்டாம் குழந்தை பெற்ற ஆலியா தற்போது குழந்தையை பார்த்துக்கொண்டு வருகிறார்.
இதன்பின் மீண்டும் ஆலியா சீரியலில் நடிக்க ஆசைப்பட்டுள்ளாராம். ராஜா ராணி 2வில் சந்தியாவாக நடிகை ரியா சிறப்பாக நடித்து வருவதால் அவரை எடுக்கமுடியாது என்று கூறப்பட்டுள்ளதாம்.
அதனால் தற்போது முல்லையாக கதிருக்கு ஜோடியாக ஆலியா நடிக்கவுள்ளார். இது அதிகாரப்பூர்வமாக இன்னும் தொலைக்காட்சி சீரியல் குழு அறிவிக்கவில்லை.