'என் பேரு மீனா குமாரி' புகழ் முமைத்தை நியாபகம் இருக்கா? லேட்டஸ்ட் குத்தாட்ட வீடியோ!!

Vijay Tamil Cinema Actress
By Bhavya Sep 01, 2025 01:30 PM GMT
Report

முமைத் கான்

கடந்த 2004ம் ஆண்டு பாலிவுட் படத்தில் டான்சராக அறிமுகமானவர் நடிகை முமைத் கான். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஏகப்பட்ட படங்களில் குத்தாட்டம் போட்டுள்ளார்.

இவர் தமிழில் கமல்ஹாசனின் வேட்டையாடு விளையாடு படத்தில் இடம்பெற்ற நெருப்பே சிக்கி முக்கி நெருப்பே பாடலுக்கு படு மாஸ் நடனம் ஆட ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்டார்.

அதன் பின், தளபதி விஜய்யுடன் "என் செல்லப் பேரு ஆப்பிள்" பாடலுக்கும் குத்தாட்டம் போட்டார். சியான் விக்ரம், ஸ்ரேயா நடித்த கந்தசாமி படத்தில் இடம்பெற்ற "என் பேரு மீனாகுமாரி" பாடலும் இவருக்கு ஏகப்பட்ட ஹைப்பை உருவாக்கியது.

நியாபகம் இருக்கா?

39 வயதாகும் முமைத் கான் திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வசித்து வருகிறார்.

தற்போது இவர், இன்ஸ்டாகிராமில் குட்டி டவுசரை போட்டு ஆட்டம் போட்டு இருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை பார்த்த ஃபேன்ஸ் அவருக்கு லைக்குகளை குவித்து வருகின்றனர். இதோ,