15 நாட்கள் கோமா!! 38 வயதான நடிகை முமைத் கான் எப்படி இருக்காங்க தெரியுமா..
தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிப்படங்களில் நடனமாடி பிரபலமானவர்களில் ஒருவர் நடிகை முமைத் கான். மும்பை பெண்ணாக வளர்ந்து தமிழில் தனக்கென ஒரு இடத்தினை பிடித்து வந்தார்.
விஜய்யின் வில்லு படத்தில் கேமியோ ரோலில் நடித்த முமைத் கான் கந்தசாமி படத்தில் மீனாக்குமாரி பாடலுக்கு படுகவர்ச்சியில் ஆட்டம் போட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

அப்படி சினிமா வாழ்க்கை செல்ல 2016ல் அவரது அப்பார்ட்மெண்ட்டில் படுக்கையில் இருந்து கீழே விழுந்து விபத்தில் சிக்கினார். அதனால் அவர் 15 நாட்கள் கோமாவில் இருந்து மீண்டு வந்தார்.
பின் சரியான சிகிச்சை, உடற்பயிற்ச்சியை தீவிரமாக மேற்கொண்டு நலமாகினார். 2017ல் பிக்பாஸ் தெலுங்கு முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு 49 நாட்களுக்கு பின் வெளியேறினார். அதற்கு இடையில் லஹாரா மாஃபியா சம்பந்தப்பட்ட விசாரணையில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டி சர்ச்சையில் சிக்கினார்.
இந்நிலையில் உடல் எடையை ஏற்றி ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய முமைத் கான் தற்போது பழைய நிலைக்கு திரும்பி இருக்கிறார். கவர்ச்சி ஆடை, உடற்பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ என்று இணையத்தில் ஆக்டிவாக இருந்து வீடியோ, புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.