மும்பையின் ரூ. 276 கோடி பங்களாவை வாங்கிய அம்பானி உறவினர்.. அப்படியொரு வரலாறு இருக்காம்..
ரூ.276 கோடி லட்சுமி நிவாஸ்
இந்தியாவின் முக்கிய நகரமான மும்பையில் சொத்து விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதுவும் தென்மும்பை, பாந்த்ரா, அந்தேரி உள்ளிட்ட பல பகுதிகளில் நிலம் மற்றும் வீடுகளின் விலை நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு அதிகரித்து வருகிறது.
மும்பையின் தென்பகுதியில் இருக்கும் நெபன்சீ ரோட்டில் உள்ள லட்சுமி நிவாஸ் என்ற பங்களா அதிகபட்சமாக ரூ.276 கோடிக்கு விற்பனையாகியிருக்கிறது.
வரலாற்று சிறப்புமிக்க இந்த பங்களா 1940ல் சுதந்திர போராட்ட காலத்தில் சுதந்திர போராட்ட வீரர்கள் ஜெய்பிரகாஷ் நாராயணன், ராம் மனோகர் லோஹியா போன்றவர்கள் இங்கு பதுங்கியிருந்தார்கள்.
அவர்கள் வெள்ளையனே வெளியேறு போராட்டம் நடத்திவிட்டு இந்த பங்களாவில் பதுங்கிக்கொள்வது வழக்கமாம்.
மேலும் சுதந்திரப்போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நடத்திய ஆஷாத் ஹிந்த் ரேடியோவும் இங்குதான் ஒலிப்பரப்பு செய்யப்பட்டது.
அப்படி புகழபெற்ற இந்த பங்களாவை உலகின் டாப் பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி குடும்பத்தோடு தொடர்புடைய நபர் விலைக்கு வாங்கியிருக்கிறார்.
எலினா நிஜில் மெஷ்வானி
அம்பானி குடும்பத்தின் நெருக்கமான உறவினரான நிகில் மெஷ்வானியின் மனைவி எலினா நிஜில் மெஷ்வானி தான் ரூ. 276 கோடிக்கு விலைக்கு வாங்கியுள்ளார்.
மிகவும் அதிக விலைக்கு வாங்கப்பட்ட சொத்தாக கருதப்படும் இந்த பங்களா இரு மாடிகளை கொண்டது. 19891 சதுர அடியுடைய பங்களாவில் ஒரு சதுர அடி ரூ.1.38 லட்சத்திற்கு விற்பனையாகியிருக்கிறது. முத்திரை தீர்வையாக சுமார் 16.56 கோடி செலுத்தி இந்த பங்களாவை வாங்கியுள்ளார் எலினா நிஜில் மெஷ்வானி.