இயக்குநர் கையில் தான் என் வாழ்க்கை இருந்துச்சு..ஆனா இப்போ!! நடிகை மும்தாஜ் வேதனை..
நடிகை மும்தாஜ்
தென்னிந்திய சினிமாவி 90ஸ் காலகட்டத்தில் பலராலும் கவனிக்கப்படும் நடிகையாகவும் கிளாமர் நட்சத்திரமாகவும் திகழ்ந்து வந்தவர் தான் நடிகை மும்தாஜ். தற்போது நடிப்பை தவிர்த்துவிட்டு முழுமையாக ஆன்மீக வாழ்க்கையில் ஈடுபட்டு வருகிறார்.

தற்போது தன்னுடைய வாழ்க்கை பற்றி உருக்கமாக பேசியிருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இயக்குநர் கையில் தான்
அதில், நான் ஒரு நடிகையாக இருந்தபோது என் வாழ்க்கையும் கேரியரும், இயக்குநர்கள் கையில் தான் இருந்தது. முதல் நாள் ஒரு உடையை என்னிடம் காட்டுவார்கள். அதே உடை ஷூட்டிங் ஸ்பாட்டில் இன்னும் சிறிதாக இருக்கிறது, என்ன சார் இது என்று கேட்டால், இயக்குநர் தான் இப்படி குறைக்க சொன்னார் என்று கூறுவார்கள்.

இயக்குநரிடம் கேட்டால், அவர் கிளாமர் சாங் மேடம் டிரஸ் சின்னதா இருந்தால்தான் நல்லா இருக்கும் என்று கூறுவார். இயக்குநர் சொன்னதை தான் நான் கேட்க வேண்டும், அதுதான் உண்மையான ஒடுக்குமுறை.
ஒரு கிரியேஷனுக்காக ஒரு வாய்ப்புக்காக, மற்றவர்களின் பேச்சைக் கேட்டு நான் வாழ்ந்திருக்கிறேன். இன்ற் அந்த வாழ்க்கையில் இருந்து விலகி அமைதியாக வாழ்கிறேன் என்று மும்தாஜ் தெரிவித்துள்ளார்.