முருகதாஸை மதிக்காத முன்னணி ஹீரோ..சினிமாவை விட்டு போகிற முடிவுக்கு வந்தார்
ar murugadoss
By Tony
முருகதாஸ் தமிழ் சினிமாவில் பல மெகா ஹிட் படங்களை கொடுத்தவர். இவர் இயக்கத்தில் கடைசியாக வந்த சர்கார், ஸ்பைடர், தர்பார் ஆகிய படங்கள் படு தோல்வியை சந்தித்தது.
இதனால் முருகதாஸ் மிகவும் மன உளைச்சலில் இருக்க, விஜய் அழைத்து மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்துள்ளார்.
அப்படத்தின் வேலைகள் அனைத்தையும் முடித்துக்கொண்டு விஜய் படம் தொடங்கும் நேரத்தில் விஜய் படத்தின் செகண்ட் ஆப் எனக்கு பிடிக்கவில்லை என்று வெளியேறியுள்ளார்.
இதனால் மிகவும் மன உளைச்சலுக்கு மேலும் ஆளான முருகதாஸ் சினிமாவை விட்டே விலகலாம் என்று இயக்குனர் செல்வமணியிடம் கூறியுள்ளார்.
உடனே செல்வமணி சினிமா என்றால் எல்லாம் இருக்க தான் செய்யும், அதற்காக கிளம்புவாயா? என்று கேட்டு சமாதனம் செய்தாராம்.