திருமண வாக்குறுதி அளித்து உடலுறவு கொள்ளுதல் பிரிவில் முத்துக்குமரன் மீது வழக்கு பதிவு..

Tamil Nadu Police Gossip Today Bigg Boss Tamil 8 MuthuKumaran Jegatheesan
By Jai Nov 21, 2026 08:30 AM GMT
Report

வஹிதா என்ற பெண், பிக்பாஸ் பிரபலம் முத்துக்குமரன் தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறி சில நாட்களுக்கு முன் வீடியோவை வெளியிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

முத்துக்குமரன்

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வஹிதா, முத்துக்குமரனுடன் இருந்த வீடியோக்களை அடுத்தடுத்து வெளியிட்டு வந்தார். இதனையடுத்து வஹிதா, தன்னை ஏமாற்றிய முத்துக்குமரனுக்கு எதிராக பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினார்.

திருமண வாக்குறுதி அளித்து உடலுறவு கொள்ளுதல் பிரிவில் முத்துக்குமரன் மீது வழக்கு பதிவு.. | Muthukumaran Now Escalated Into A Police Case

தற்போது தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பழகிவிட்டு ஏமாற்றிவிட்டதாக பிக்பாஸ் முத்துக்குமரன் மீது இளம் பெண் வஹிதா விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

வழக்கு பதிவு

இந்நிலையில் விருகம்பாக்கம் போலிசார் வஹிதாவின் புகாரின் பேரில் 69 பிஎன்எஸ்(பொய்யான திருமண வாக்குறுதி அளித்து உடலுறவு கொள்ளுதல்) பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.