மனைவியை உசிப்பேற்றிவிட்டவர்களே இவங்கதானாம்? இயக்குனர் பாலா விவாகரத்தில் விளையாடிய நடிகைகள்!
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக இருக்கும் பாலா, 18 வருட திருமண வாழ்க்கை ஒருகட்டத்தில் முடிந்துள்ளது என்று விவாகரத்து செய்தியை வெளியிட்டார். கடந்த 4 ஆண்டுகளாக மனைவி முத்துமலருடன் ஏற்பட்டு வந்த மனக்கசப்பு காரணமாக விவாகரத்து பெற முடிவு செய்து தற்போது சட்ட ரீதியாக பிரிந்தனர்.
ஒரு மகள் இருக்கும் நிலையில் பாலா முத்துமலரின் இந்த முடிவு தமிழ் சினிமாவையே அதிரவைத்தது. இந்நிலையில் இந்த விவாகரத்தில் பிரபலங்களின் மனைவிகள் நடிகைகள் உடந்தையாக இருந்திருக்கிறார்கள் என்ற செய்தி வெளியாகியுள்ளது. பிரபலங்கள் என்றாலே அனைவரும் நட்பாக பழகி எங்கு வேண்டுமானாலும் செல்வார்கள்.
அப்படி இயக்குனர்கள் நடிகர்களின் மனைவிகள், நடிகைகள் நட்புறவை வளர்த்து கொள்வார்கள். அப்படி பாலாவின் மனைவி முத்து மலர், ப்ரீத்தா விஜயகுமார், சினேகா, மீனா, ஜெயம்ரவி மனைவி ஆர்த்தி உள்ளிட்ட பலருடன் நட்புறவில் இருக்கிறார்.
அவர்கள் அனைவரும் இணைந்து வெளியில் செல்வது, வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வது என்று தங்கள் பொழுதை போக்கி வருவார்கள். அதாவது பாலாவின் திருமணத்திற்கு முன் மனைவி முத்து மலர் பிரபல அரசியல் பிரமுகரின் மகன் ஒருவருடன் காதலில் இருந்து வருகிறார் என்ற செய்தி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
இதையெல்லாம் பாலாவை திருமணம் செய்த பிறகு மறைத்து வைத்து வந்த முத்துமலர் தற்போது அவருடன் ஊர்சுற்றி வருவதாகவும் தெரிகிறது. அந்த சமயத்தில் பாலாவின் போக்கு அவருக்குப் பிடிக்காமல் போக தன் தோழிகளான அந்த நடிகைகளிடம் அவர் புலம்பியுள்ளார்.
அதற்கு அவர்களும் பல யோசனைகளை கூறியதை கேட்டு தான் முத்துமலர் இதுமாதிரியாக காரியத்தில் ஈடுபட்டதாக பாலா தற்போது தனக்கு நெருக்கமானவர்களிடம் புலம்பி வருகிறாராம்.



