திருமணமாகி ரெண்டே மாசத்தில் ரவீந்தருக்கு மகாலட்சுமி கொடுத்த ஆப்பு.. இந்த விசயத்தையும் விடலையா
சின்னத்திரை சீரியல் நடிகையாக ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து வந்தவர் நடிகை மகாலட்சுமி. கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி தயாரிப்பாளர் ரவீந்தரை 2 ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை இருக்கும் நிலையில் விவாகரத்து செய்து பிரிந்து வாழ்ந்து வந்தார். அதன்பின் இரண்டாம் திருமணத்தை ரவீந்தருடன் முடித்து சர்ச்சைக்குள்ளானது.

ரவீந்தர் - மகாலட்சுமி
பல விமர்சனங்களை கண்டுக்கொள்ளாத ரவீந்தர் - மகாலட்சுமி தங்கள் வாழ்க்கையில் சிறப்பாக வாழ்ந்து வருவதாக தெரிவித்தனர். கடந்த வாரம் ரவீந்தருக்கு உடல்நிலை குறைபாடு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது.. இந்நிலையில் நேற்று முன் தின நாள் தீபாவளியை தல தீபாவளியாக கொண்டாடியிருக்கிறார்கள் புது தம்பதியினர்.
வேகவைத்த முட்டை
சீரியலில் நடிக்கும் மகாலட்சுமி பிக்பாஸ் நிகழ்ச்சியை விமர்சனம் செய்யும் ரவீந்தரை அதை செய்ய கூடாது என்று கண்டிஷன் போட்டு இருந்தார். ஆனால் அதைமீறி விமர்சனத்தை தொடர்ந்து வருகிறார்.
இந்நிலையில் ரவீந்தர் உடல் எடையை குறைக்க மகாலட்சுமி கூறியதால் தினமும் வேகவைத்த முட்டை மட்டுமே சாப்பிட்டு வருவதாக கூறி ஒரு புகைப்படத்தோடு ஒரு பதிவினை போட்டுள்ளார். என் வாழ்க்கையில் முட்டை இந்த அளவிற்கு கருகி போனதை நான் பார்த்ததில்லை. மகலாட்சுமி நிச்சயமாக என் எடை குறைய வைத்துவிடுவார்.
புது வாழ்க்கை. புதுமனைவி.. சூப்பர் சமையல் ஆனால் அந்த முட்டை கருகி எடுத்து மனைவி கொடுத்துள்ளாரே என்று சோகத்துடன் ரவீந்தர் பதிவுக்கு கலாய்த்தபடி கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.