ஹீரோயின் ரச்சிதாவைவிட அதிக லட்சத்தில் புறண்ட மைனா நந்தினி.. சம்பளமே இத்தனை லட்சமா!!
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இன்றோடு இறுதி நாளாக முடிவடையவுள்ளது. 104 நாட்கள் போட்டியிட்டப்பின் இன்று கமல் ஹாசனால் சீசன் 6ன் டைட்டில் வின்னர் யார் என்ற செய்தியை அறிவிக்கவுள்ளார்.

இந்நிலையில் அசீம், விக்ரமன், ஷிவின் மூவருக்கும் அவர்களது ரசிகர்கள் வாக்களித்து வந்த நிலையில் நேற்று மைனா நந்தினி பிக் எவிக்ஷனில் இருந்து வீட்டைவிட்டு 3வது ரன்னர் அப்-ஆக வெளியேறியிருக்கிறார்.
வைல்ட் கார்ட் மூலம் நிகழ்ச்சி துவங்கி 7வது நாளில் வீட்டிற்கு சென்று 96 நாட்கள் இருந்த மைனா நந்திக்கு ஒரு நாள் சம்பளமாக 25 ஆயிரம் பேசப்பட்டு மொத்தம் 24 லட்சம் சம்பளமாக பெற்று வீட்டிற்கு சென்றுள்ளார்.

ஹீரோயினாக நடித்து வரும் ரச்சிதா ஒரு வார சம்பளமாக 28 ஆயிரம் என நிர்ணயித்து 91 நாட்களுக்கு வெறும் 3 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் மட்டுமே சம்பளமாக பெற்று மைனா நந்தினியை விட குறைவான சம்பளத்தை பெற்றிருக்கிறார் ரச்சிதா.
11.75 லட்சம் பணப்பெட்டியை மைனா நந்தினி எடுத்திருந்தால் 35 லட்சம் தொகையை எடுத்திருந்திருக்கலாம். ஆனால் இறுதிவரை இருந்து போட்டிப்போட்டிருக்கிறார் மைனா நந்தினி.
இதன்பின் மைனாவிற்கு தனியாக ஒரு நிகழ்ச்சி கொடுக்கலாம் இல்லை என்றால் யூடியூப் சேனல் விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சி என்று சென்றுவிடுவார் என கூறி வருகிறார்கள்.