சூர்யாவின் கருப்பு ஹிட்டெல்லாம் ஓகேதான்!! வாடிவாசல் நினைத்து வேதனையில் பிரபல இயக்குநர்..
கருப்பு
ஆர்.ஜே. பாலாஜி - நடிகர் சூர்யா கூட்டணியில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் கருப்பு. இப்படத்தின் வசூல் குறித்து முதல் நாளில் இருந்தே நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம். 5 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள கருப்பு உலகளவில் ரூ. 165 கோடி வசூல் செய்துள்ளது.

இனி வரும் நாட்களிலும் இந்த வசூல் வேட்டை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யாவின் கரியருக்கு பல ஆண்டுகள் கழித்து மிகப்பெரிய ஹிட் படமாக கருப்பு மாறியிருக்கிறது.
வாடிவாசல்
என்னதான் சூர்யாவின் கருப்பு படம் வெற்றி நிம்மதியை கொடுத்தாலும் இன்னொரு பக்கம் வாடிவாசல் திரைப்படத்தின் பணிகள் நின்று போனதை நினைத்து பலரும் வருத்தப்பட்டு வருகிறார்கள். இப்படம் வந்த ஸ்லாட்டில் வாடிவாசல் தான் வரவிருந்தது.
வெற்றிமாறன் இயக்கத்தில், கலைப்புலி தாணு தயாரிப்பில் பிரமாண்டமாகவும் பிரமாதமாகவும் இந்திய சினிமாவில் முக்கியமாக படமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டது. காளைகளை வைத்து டெஸ்ட் ஷூட் நடத்தியும் அதற்காக சூர்யாவும் தன்னுடைய பூர்வீக ஊரில் காளையை வளர்த்தார்.

லண்டனில் இதற்கான கிராஃபிக்ஸ் பணிகளும் தொடங்கியது. இப்படி அனைத்தும் பார்த்து பார்த்து செய்தது படக்குழு. அமீர் உள்பட முக்கியமான ரோலை ஏற்கவிருந்தார்கள். ஆனால் படம் ட்ராப் செய்யப்பட்டதாக தகவல்கள் வருகிறது. அதற்கு பதிலாகத்தான் தாணுவுக்கு அசுரன் படத்தை வெற்றி செய்து கொடுக்கிறார் என்றும் ஒரு பேச்சு இருக்கிறது.
மிஷ்கின்
இந்நிலையில், இயக்குநரும் நடிகருமான மிஷ்கின் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், வாடிவாசல் கதையை வெற்றிமாறன் எனக்கு சொன்னார். அது அசாதாரணமாக இருந்தது. அது நடக்காமல் போனதில் எனக்கு ரொம்பவே வருத்தம். ஆனால் கருப்பு படத்தில் மூலம் சூர்யா வெற்றிப் பெற்றிருப்பது எனக்கு சந்தோஷம்.

அவர் ஒரு ஜீனியஸ் நடிகர். சமீபத்தில்கூட சில தடைகளை சந்தித்தார். பாலாஜி அவருக்கு ஒரு ஹிட்டை கொடுத்திருப்பது மகிழ்ச்சி. இது எல்லாத்தையும் விட வெற்றிமாறன் என்னிடம் வாடிவாசல் கதையை சொன்னபோது நான் அதிகம் மகிழ்ச்சியடைந்தேன். என்ன ஒரு கதை அது, ரொம்ப ரொம்ப அழகான கதை.
அது மட்டும் வந்திருந்தால் சூர்யாவுக்கு அது ஆல்-டைம் ஹிட்டாக அமைந்திருக்கும், ஆனால் நடக்கவில்லை, இனியும் அது நடப்பதற்கு வாய்ப்புகள் இருப்பதாகவே பார்க்கிறேன்.