அந்த நாய் சாகுற வரைக்கும் நடிக்கனும்.. நடிகை பூர்ணாவை மேடையில் அழவைத்த இயக்குனர் மிஸ்கின்..
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழ்ந்து வரும் இயக்குனர் மிஸ்கின், இயக்கத்தை தாண்டி தற்போது நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் விஜய்யின் லியோ படத்தில் வில்லன் ரோலில் நடித்தும் இருக்கிறார். அவர் இயக்கத்தில் பிசாசு 2 ஒருசில காரணங்களால் வெளியாகுவதில் தாமதமாகியுள்ளது.
சமீபத்தில், அவர் இசையில் உருவான Devil படத்தின் பிரஸ் மீட்டில் கலந்து கொண்டு மேடையில் பேசியுள்ளார் இயக்குனர் மிஸ்கின். அவர் பேசிகையில், பூர்ணா என்கிற குழந்தையை பார்க்கும் போது மூட் ஆகிறது. பூர்ணாவின் காலை என் தலையில் வைத்துக்கொள்ளலாம். வாழ்நாளில் 10 பேரை சந்திப்போம். அதிலும் பெண்களில் 3 பேரை சந்திப்போம்.
வேறொரு மனிஷி வருவாள், அன்பை கொடுப்பாள், பூர்ணா எனக்கு அவ்வளவு அன்பை கொடுத்திருக்கிறாள். இவள் வயிற்றில் அடுத்த ஜென்மத்தில் பிறக்கனும், அவள் அம்மாவா இருக்கனும். அவ்வளவு நல்லவள். அதனால் தான் பூர்ணா என் படத்தில் இருக்கனும் என்று நினைப்பேன்.
இதை பலர் என்னையும் பூர்ணாவையும் தப்பாக பேசுவார்கள், அப்படியெல்லாம் கிடையாது. ரொம்பவும் மென்மையானவள். அவள் திருமணம் செய்து கொண்டபோது சந்தோஷப்பட்டேன், ஆனால் கோபம் வந்தது.
எவ்வளவு பெரிய நடிகை, இன்னும் 5 வருடம் நடிச்சி தொலைத்திருக்கலாமே என்று சொன்னேன். கல்யாணம் பண்ணி துபாய்க்கு சென்றுவிட்டா, இங்கே இருந்தாவது போய் பார்க்கலாம். திருமணமாகி குழந்தை பெற்று குண்டாகினாலும் பரவாயில்லை, அந்த நாய் சாகுற வரைக்கும் நடிக்கனும் என்று நான் ஆசைப்படுகிறேன் என்று மிஸ்கின் தெரிவித்திருக்கிறார்.
You May Like This Video