சிவகார்த்திகேயனும் தெரியாது திரிஷாவும் தெரியாது.. வாய்க்கொடுத்து மாட்டிக்கொண்ட இயக்குனர் மிஷ்கின்

Sivakarthikeyan Trisha Dhivyadharshini Mysskin
5 நாட்கள் முன்
Edward

Edward

தற்போதைய தமிழ் சினிமாவில் குறுகிய காலக்கட்டத்தில் தன் உழைப்பால் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். தொகுப்பாளராக இருந்து பின் காமெடி நடிகராக திகழ்ந்தார். பின் அடுத்தடுத்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்தி பல வெற்றிகளை கொடுத்து வருகிறார்.

தற்போது 30 கோடி அளவில் சம்பளம் வாங்கும் அளவிற்கு அயலான், மாவீரன், பிரின்ஸ் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இவரை போல் 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக இருந்து வருபவர் நடிகை திரிஷா. முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்துள்ள திரிஷா தற்போது மார்க்கெட் இழந்து, பொன்னியின் செல்வன் படத்திற்காக காத்திருக்கிறார்.

இந்நிலையில், இயக்குனராகவும் நடிகராகவும் பல வெற்றிப்படங்களை கொடுத்த மிஸ்கின் அவர்கள் காப்பி வித் டிடி நிகழ்ச்சியில் நடிகர் பாண்டியராஜுடன் கலந்து கொண்டுள்ளார். நிகழ்ச்சியில் சில நட்சத்திரங்களை பற்றி கேட்டுள்ளார்.

சிவகார்த்திகேயனும் தெரியாது திரிஷாவும் தெரியாது.. வாய்க்கொடுத்து மாட்டிக்கொண்ட இயக்குனர் மிஷ்கின் | Mysskin Open Talk About Trisha Sivakarthikeyan

அதில், ரஜினிகாந்த் - முள்ளும் மலரும்,

அஜித் குமார் - பெரிய மனதுகாரர் என்று கூறிய மிஸ்கின்,

தனுஷ் - நீங்கள் நன்றாக கதை கூறுகிறீர்கள் நீங்கள் நடித்தால் என்ன என்று கேட்டார் என்று தெரிவித்துள்ளார்.

திரிஷா - தெரியாது, சிவகார்த்திகேயன் - தெரியாது என்று கூறியுள்ளார்.

அந்நிகழ்ச்சியின் போது சிவகார்த்திகேயன் அறிமுக நடிகராக திகழ்ந்து வந்ததால் அவரை தெரியாது என்று கூறியிருக்கலாம். ஆனால் திரிஷாவை பற்றி ஏன் தெரியாது என்று கூறினார் என்று கேள்விகளை கேட்டு வருகிறார்.

சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் மிஸ்கின் வில்லன் ரோலில் நடிப்பதால் இந்த விசயம் வெளியாகி வைரலாகி வருகிறது.

Gallery

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.