போனி கபூர் யாருனு தெரியாது ஆனால் அவர் மனைவியுடன் நான்.. மிஸ்கின் சர்ச்சை பேச்சு
Mysskin
Boney Kapoor
By Dhiviyarajan
வித்தியாசமான கதைகளை இயக்கி தனக்கென பல ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருப்பவர் மிஸ்கின். இவர் 2006 -ம் ஆண்டு வெளியான "சித்திரம் பேசுதடி" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக மாறினார். இப்படத்திற்கு மக்கள் நல்ல விமர்சனம் கொடுத்தனர்.
இதையடுத்து மிஸ்கின் பல வெற்றி படங்களை கொடுத்த பிரபல இயக்குனராக வலம் வருகிறார்.
சமீபத்தில் டைனோசர் என்ற படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் மிஸ்கின் பங்கேற்றுள்ளார். அங்கு அவர், எனக்கு போனி கபூர் யார் என்று தெரியாது. ஆனால் அவரின் மனைவி நடித்த படங்களில் எதாவது ஒரு படத்திலாவது உதவி இயக்குனராக பணியாற்ற வேண்டும் நினைத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார். இவர் பேசிய மேடையில் போனி கபூர் இருந்தது குறிப்பிடத்தக்கது.