இளையராஜாவால் அடிவாங்கிய இயக்குனர்!! உண்மையை கூறிய மிஸ்கின்..
தமிழ் சினிமாவில் இசைக்கடவுளாகவும் இசைஞானியாகவும் திகழ்ந்து பல்லாயிரக்கணக்கான பாடல்களை கொடுத்து தன் பக்கம் ஈர்த்து வருபவர் இளையராஜா. கோடிக்கணக்கான ரசிகர்களை ஈர்த்து வரும் இசைஞானி பற்றி அவருடன் பணியாற்றி கலைஞர்கள் பேட்டிகளில் புகழ்ந்து வருவார்கள்.
அப்படி பிரபல இயக்குனர் மிஸ்கினும் இளையராஜாவின் தீவிர ரசிகர் என்றும் அவரால் தன் அம்மாவிடம் அடிவாங்கிய விசயம் பற்றி பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளார்.
அவரது சிறுவயதில் கடை தெருவிற்கு செல்லும் போது அன்னக்கிளி படத்தின் பாடலை கேட்டதும் அங்கேயே நின்றுவிட்டதாகவும், அது தான் நன் கேட்ட முதல் பாடல் என்றும் தெரிவித்துள்ளார்.
அதன்பின் வளர்ந்ததும் பக்கத்துவீட்டில் இருப்பவர் ஒருநாள், நிழல்கள் படத்தின் பாடல் கேசட்டை வாஙகி கேட்டுக்கொண்டிருந்தார். அவரிடம் சென்று அந்த கேசட்டை கேட்டுவிட்டு தருவதாக கூறி கிட்டத்தட்ட ஒரு நாள் முழுவதும் அந்த பாடல்களை திரும்ப திரும்ப கேட்டு வந்துள்ளார்.
இதனால் அவரது அம்மா கடுப்பாகி தன்னை அடித்ததாகவும் இளையராஜா பாடல் மீது அப்படியொரு ஈர்ப்பு என்றும் இயக்குனர் மிஸ்கின் தெரிவித்துள்ளார்.