விவாகரத்துக்கு பின் கணவருடன் வாழப்போறேனா!! டாட்டூவை அழித்து முற்றுப்புள்ளி வைத்த நடிகை சமந்தா..
புஷ்பா படத்தில் கவர்ச்சி ஆட்டம் போட்டப்பின் மயோசிடிஸ் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட நடிகை சமந்தா, அந்த கஷ்டத்திற்கு மத்தியிலும் சகுந்தலம், குஷி உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்தார்.
ஏற்கனவே ஆசையாய் காதலித்த நாக சைதன்யாவை திருமணம் செய்து 4 ஆண்டுகளில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்தார்.
அதன்பின் மனதாலும் உடலாலும் பல கஷ்டபங்களை சந்தித்தும் வந்தார். தற்போது மயோசிடிஸ் நோயிற்கு சிகிச்சை பெற்று கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறார். இதற்கிடையில் நாக சைதன்யாவுடன் மீண்டும் இணைகிறார் என்று இருவரும் பகிர்ந்த வீடியோவால் செய்திகள் பரவியது. ஆனால் சமந்தா அதற்கு முற்றுப்புள்ளி வைத்து கருத்துக்களை தெரிவித்தார்.
இந்நிலையில் சமந்தா, சமீபத்தில் துபாயில் நடந்த கடை திறப்பு விழாவிற்கு சென்று கவர்ச்சி ஆடையில் மின்னினார். நிகழ்ச்சியில் கவர்ச்சிகரமான சேலையில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து வருகிறார். அதில் இடுப்பு பகுதியில் நாக சைதன்யாவின் Chai என்ற டாட்டூவை சமந்தா போட்டிருந்தார்.
ஆனால் அதை அழித்துவிட்டேன், அவருடன் சேரப்போவதில்லை என்று மறைமுகமாக கூறும் வகையில் இடுப்பு பகுதியில் இருந்த அந்த டாட்டூவை அழித்துள்ளதை காட்டி முற்றுப்புள்ளி வைத்தார். கவர்ச்சியாக இடுப்பை காட்டி போஸ் கொடுத்த சமந்தாவால் ரசிகர்கள் மெய்மறந்து போய் வருகிறார்கள்.

