சமந்தாவின் முன்னாள் கணவர் இப்படிப்பட்டவர் தான்? 18 வயது நடிகை கூறிய உண்மை..

Naga Chaitanya Krithi Shetty Venkat Prabhu
By Edward Jul 14, 2022 02:50 AM GMT
Report

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் நாக சைதன்யா நடிகை சமந்தாவை கடந்த ஆண்டு விவாகரத்து செய்த பின் படங்களில் அதிக கவனம் செலுத்து வருகிறார். இடையில் நாக சைதன்யாவுக்கும் ஒரு நடிகைக்கும் ரகசிய தொடர்பு இருந்ததாக பொய்யான தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதை கண்டுகொள்ளாத நாக சைதன்யா பங்கார ராஜூ என்ற படத்திற்கு பிறகு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் என்சி22 படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மீண்டும் நடிகை கிரித்தி செட்டி நடிக்க கமிட்டாகி இருக்கிறார்.

அடுத்த மாதம் ஆரம்பிக்கவுள்ள படப்பிடிப்பு பற்றியும் நடிகர் நாக சைதன்யா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் பற்றியும் நடிகை கிரித்தி செட்டி பேட்டியொன்றில் பகிர்ந்து கொண்டுள்ளார். அப்படி நடிகை நாக சைதன்யா பற்றி கூறியதில், நாக சைதன்யாவுடன் பணியாற்றுவது மிகவும் சவுகரியமான ஒன்ரு தான்.

பங்கார ராஜூ படத்தில் அவருடன் பணியாற்றியது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதால் மீண்டும் நல்ல படத்தை கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அவரை சந்தித்த போது இத்தனை ஆண்டுகள் சினிமாவில் பணியாற்றிய அவர் மிகவும் எளிமையானவர்.

தூய மனம் கொண்டும் நேர்மையுடனும் இருப்பதால் அவரிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டதாகவும் கூறியுள்ளார், மேலும் படப்பிடிப்பில் முதல் முறை சந்தித்த போது நட்சத்திரங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை பற்றி பேசினோம் என்றும் சமுகவலைத்தளத்தில் எழும் விமர்சனங்களை பெரியளவில் எடுத்துக்கொள்வது கிடையாது.

அனைத்தையும் நேர்மறையான எண்ணத்துடன் அணுக வேண்டும் என்று கூறினார் என கிரித்தி செட்டி நாக சைதன்யாவை புகழ்ந்து தள்ளியுள்ளார்.