விவாகரத்துக்கு பின் நட்பாக பழக கூப்பிட்ட சமந்தா!! நாக சைதன்யா கொடுத்த பதிலடி இதுதான்..
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் நாக சைதன்யா, நடிகை சமந்தாவுடன் பல படங்களில் ஜோடியாக நடித்திருந்தார். ரீல் ஜோடியாக இருந்த இருவரும் 2017ல் காதலித்து திருமணம் செய்து ரியல் ஜோடிகளாக மாறினர்.
4 வருட வாழ்க்கையில் கருத்து வேறுபாடு ஏற்பட்ட சமந்தா நாக சைதன்யாவை பிரிவதாக கூறி விவாகரத்து பெற்று சென்றுவிட்டார். அதன்பின் நாக சைதன்யா படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார்.
இதன்பின் நடிகை சோபிதாவுடன் ரகசிய காதலில் இருப்பதாகவும் அவுட்டிங் சென்ற புகைப்படங்களும் இணையத்தில் கசிந்தது. தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கஸ்டடி படத்தில் நடித்துள்ள நாக சைதன்யா பிரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
வரும் மே 12 ஆம் தேதி அப்படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் சமந்தா விவாகரத்துக்கு பின் ஒரு பேட்டியொன்றில் விவாகரத்து பெற்றாலும் நட்பை தொடரலாம் என்று கூறி ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்.
இதுகுறித்து நாக் சைதன்யாவிடம் கேள்வி கேட்கப்பட்டது. பிரியலாம் என்று முடிவெடுத்தப்பின் நட்பு எதற்கு, இதுதான் தன்னை மிகவும் எரிச்சல் அடையவைக்கிறது. அப்படிப்பட்ட நட்பே எனக்கு தேவையில்லை என்று பதிலளித்துள்ளார்.