சமந்தாவுடன் ஏற்பட்ட விவாகரத்து!! மனம் திறந்து பேசிய நடிகர் நாக சைதன்யா..
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் நாக சைதன்யா தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கஸ்டடி படத்தின் பிரமோசன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
நடிகை சமந்தாவை 2017ல் காதலித்து திருமணம் செய்து 4 ஆண்டுகள் சிறப்பாக வாழ்ந்து வந்தனர். இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சமந்தா நாக சைதன்யாவை விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார்.
தற்போது சமந்தாவுடன் ஏற்பட்ட விவாகரத்து குறித்த கேள்வி ஒன்றிற்கு பதிலளித்துள்ளார் நாக சைதன்யா. விவாகரத்து செய்ய இரு ஆண்டுகளுக்கு முன் முடிவெடுத்து சட்ட பூர்வமாக இருவரும் பிரிந்து 1 வருடமாகிவிட்டது.
சமந்தாவுடன் வாழ்ந்த நாட்களை மிகவும் நான் மதிக்கிறே என்றும் அவர் நல்ல பெண், வாழ்க்கையில் அவருக்கு அனைத்து சந்தோஷங்களும் கிடைக்க வேண்டும்.
இணையத்தில் எங்களை பற்றி வெளியாகும் வதந்திகளால் தான் எங்களுக்குள் இருக்கும் நல்லுறவை பாதிக்கிறது என்று நாக சைதன்யா மனம் திறந்து கூறியிருக்கிறார்.