சமந்தாவுடன் விவாகரத்துக்கு பிறகு புதிய காதலில் விழுந்த நடிகர் நாகசைதன்யா..
தென்னிந்திய அளவில் பிரபலமான காதல் திருமண ஜோடிகளாக இருந்தவர்கள் நடிகை சமந்தா மற்றும் நடிகர் நாகசைதன்யா. இருவரும் காதலித்து கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்களுடைய திருமணம் பல கோடி செலவில் பிரமாண்டமாக நடைபெற்றது.
திருமணத்திற்கு பின் சில வருடங்கள் சொந்தோஷமாக வாழ்ந்து வந்த இவர்கள், கடந்த மாதம் தீடீரென தங்களுடைய விவகாரத்தை அறிவித்தனர். இது ரசிகர்களின் மனதை சுக்குநூறாக உடைய செய்தது. இதன்பின் தற்போது இருவரும் பிரிந்து, தங்களுடைய திரை வாழ்க்கையில் கவனம் செலுத்து துவங்கியுள்ளனர்.
இந்நிலையில் நடிகர் நாகசைதன்யா தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் ஒரு புத்தகத்தை குறிப்பிட்டு, ' வாழ்க்கையின் காதல் கதை ' என்று கூறியுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணைத்தளத்தில் நாகசைதன்யா அடுத்த காதல் என்ற பெயரில் வைரலாகி வருகிறது.