'நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்'.. மருமகள் சோபிதாவை பற்றி பேசிய மாமனார் நாகர்ஜுனா..
நடிகர் நாக சைதன்யாவின் மறுமணம் கடந்த டிசம்பர் 4ஆம் தேதி நடந்தது. நடிகை சோபிதாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இருவரும் பல நாட்கள் காதலித்து வந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் தான் அதனை அறிவித்தனர். இரு வீட்டார் சம்மதத்துடன் நாக சைதன்யா - சோபிதாவின் திருமணம் விமர்சையாக நடைபெற்று முடிந்தது. திருமண புகைப்படங்களும் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் வைரலானது.
இந்த நிலையில், மருமகள் சோபிதாவை பற்றி மாமனாராக நாகர்ஜுனா சில விஷயங்களை சமீபத்தில் பகிர்ந்துள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அவர் கூறியதாவது, "நாகசைதன்யாவிற்கு சோபிதாவின் மீது காதல் வருவதற்கு முன்பே எனக்கு அவரை நன்றாக தெரியும். சோபிதா அவருடைய கடினமான உழைப்பாலும், திறமையாலும் இந்த இடத்தை அடைந்துள்ளார். அவரை போல் மிகவும் அமைதியான ஒரு மருமகள் கிடைத்ததற்கு நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்" என கூறியுள்ளார்.